ஒரு படத்தை கைப்பற்ற போட்டா போட்டி போடுவது நடிகர், நடிகைகள் மட்டுமல்ல, தொழில் நுட்ப கலைஞர்களும்தான்! திரைக்கு பின்னால் நடக்கிற இந்த மோதல் பெரும்பாலும் வெளி வருவதேயில்லை. ஆனால் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் என்றால் அதையும் மறைக்க முடியாது என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் நாம் சொல்லப் போகிற இந்த செய்தி.
செல்வராகவன் இயக்கத்தில் கமல் நடிக்கப் போகிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கப் போகிறாராம். கமல் நடித்த தசாவதாரம் படத்தை தயாரித்த அனுபவம் இருக்கிறது ரவிச்சந்திரனுக்கு!
செல்வராகவன் படங்கள் என்றால் ராம்ஜிதான் பெரும்பாலும் ஒளிப்பதிவு செய்வார். இதை அறிவிக்காவிட்டதும் புரிந்து கொண்டு ஒதுங்கிவிடுவார்கள் மற்ற ஒளிப்பதிவாளர்கள். ஆனால் முதன் முறையாக 'கிராஸ் கேம்' ஆடியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம்.
நேரடியாக கமலையே சந்தித்து இந்த படத்தை ஒளிப்பதிவு செய்ய வாய்ப்பு கொடுங்கள் என்றாராம். கமல் இதற்கு என்ன பதில் சொன்னார் என்பது இருக்கட்டும்... விஷயத்தை கேள்விப்பட்ட ராம்ஜி பற்களை நறநறத்துக் கொண்டிருக்கிறாராம்!

No comments:
Post a Comment