கடந்த இரண்டு நாட்களாக சென்னையில்தான் இருக்கிறார் விஜய். டேராடூனில் நடந்து வரும் 'நண்பன்' படப்பிடிப்பிலிருந்து இவ்வளவு அவசரமாக சென்னைக்கு வர வேண்டிய அவசியம் என்ன என்று மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது விஷயமறிந்த வட்டாரம். இதற்கிடையில் 'சட்டப்படி குற்றம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 14 ந் தேதி கமலா திரையரங்கத்தில் வைத்திருக்கிறார் எஸ்.ஏ.சி.
ஆடியோ விழாவில் கலந்து கொள்ள 'அம்மாவை' அழைத்துக் கொண்டிருந்தாரே, என்னாச்சு? இந்த கேள்விக்கும் நேற்றுதான் விடை கிடைத்தது. எஸ்.ஏ.சி எடுத்த தொடர் முயற்சிகள் செல்லுபடியாகவில்லையாம்.
இந்த தேர்தலில் விஜய் மாவட்டம் தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்களாம் அதிமுக தரப்பில். இந்த விஷயத்தில் விஜய்க்கு ஒரு தயக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேண்டுமென்றால் தேர்தலுக்கு முன்பு ஒரு அறிக்கை மட்டும் தருவதாக கூறினாராம். இந்த பேச்சு வார்த்தை திருப்தியாக அமையாமல் போனதும்கூட அம்மா ஆடியோ நிகழ்ச்சிக்கு வராததற்கு ஒரு காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இதற்கிடையில் விஜய் மன்ற தோழர்களுக்கு மூன்று சீட் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியும் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வருகிறதாம்!
தேர்தலுக்கு பிறகு தான் அதிமுக விஜய்க்கு ஆப்பு வைக்கும் என்று நினைத்தால் இப்போதே ஆப்பு வைக்க பாக்குதே...!!

No comments:
Post a Comment