Thursday, March 31, 2011

காமெடி பீஸ் வடிவேலு : நடிகை விந்தியா கலாய்ப்பு


நடிகை விந்தியா அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 


அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்து வருவதற்கு பதிலடி கொடுத்தார். 


விந்தியா பிரச்சாரத்தின் போது,    ‘’காமெடி பீஸு வடிவேலு திமுகவுக்கு வந்திருக்கிறாரு.  ஓகேகாமெடி பண்ணட்டும்.  

என்ன வாங்குனாரோ தெரியல.   எவ்வளவு வாங்குனாரோ தெரியல.  வடிவேலுவும் வந்து சேர்ந்துட்டாரு அந்த கூட்டத்துல.  


வடிவேலு! இந்த காமெடி பீஸைப்பத்தி நிறைய பேசியே ஆகனுங்க.   இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக்கட்டுவாராம்.  இதை விட மிகப்பெரிய காமெடி ஒன்னுமே இல்லங்க.


நக்கல் இருக்குல்ல அவருக்கு.  மக்களுக்கு  நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன்.  (கரவொலி)கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். ( பலத்த கைத்தட்டல், விசில்)  பொதுவா வடிவேலும் அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார்.  அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. 

அடிவாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு’’ என்று கலாய்த்தார்.




No comments:

Post a Comment