Wednesday, March 30, 2011

ஓட்டு வேட்டை தொடங்கியது வீடு வீடாக, சரக்குடன் பிரியாணி சப்ளை


தஞ்சை  மகர்நோன்பு சாவடி வாணக்காரத் தெருவில் ஒரு வீட்டில், நான்கு பெரிய பாத்திரத்தில் சிக்கன் பிரியாணி தயாரித்தனர். அங்கிருந்து சிறிய பாத்திரங்களில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சிலர் டி.வி.எஸ்., எக்ஸெல், சைக்கிள் போன்றவற்றில் எடுத்துச் சென்று சப்ளை செய்தனர்.

வீட்டில் குடிப்பழக்கம் உள்ளவர்கள் இருந்தால் வீட்டுக்கு ஒரு புல், "ஆல் கோல்டு,' பிராந்தி பாட்டிலும் வழங்கப்பட்டது.



இதுபற்றி, வருமான வரித்துறை மற்றும் தஞ்சை ஆர்.டி.ஓ., முத்துலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஆல்பர்ட் ரொசாரியோ, போலீஸ் எஸ்.ஐ., கழனியப்பன், இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் அதிகாரிகள் அந்த வீட்டுக்கு மதியம் 2 மணியளவில் சென்றனர்.

பிரியாணியை எங்கோ தயார் செய்து அந்த வீட்டின் ஒதுக்குப்பகுதியில் வைத்து, அங்கிருந்து சப்ளை செய்தது தெரியவந்தது.

அதிகாரிகள் வந்ததைக் கவனித்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதற்குள், 95 சதவீத பிரியாணி, சரக்கு பாட்டில்களை சப்ளை செய்து முடித்துவிட்டனர்.


இறுதியாக ஒரு பாட்டில் புல், அரை பாத்திரத்தில் பிரியாணி, ஒரு டி.வி.எஸ்., எக்ஸெல், ஒரு மாருதி ஆம்னி ஆகியவற்றை மட்டும் கைப்பற்றினர்.


இந்த பிரியாணி சப்ளைக்கும், அந்த வீட்டுக்கும் தொடர்பில்லை என்றும், எந்தக் கட்சி சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது என்பதற்கும் ஆதாரமும் இல்லை. கைப்பற்றப்பட்ட பொருட்களைக் கொண்டும், பிரியாணி சப்ளை செய்தவர், சமையல் செய்தவர் குறித்து பறக்கும் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



இன்றைய பதிவுகள்...



No comments:

Post a Comment