Wednesday, March 30, 2011

சேலத்தை தொடர்ந்து திருவிடைமருதூர்: விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு



நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிடைமருதூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது பேனரை எரித்தனர்.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த ரசிகர் மன்றத்தினர் சுமார் 25 பேர் 28.03.2011 அன்று மன்றம் முன்பு கூடினார்கள். அவர்கள் மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். எதிர்ப்பு கோஷமிட்டபடி தங்கள் உறுப்பினர் கார்டையும் தீவைத்து எரித்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.


இதேபோல் நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிடைமருதூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது பேனரை எரித்தனர்.

இது குறித்து திருவிடைமருதூர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்நத பாலகுரு கூறும்போது, விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு நடிகராகத்தான் அவரை பார்த்தோம். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து உள்ளார். ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ரசிகர் மன்றங்களை கலைக்குமாறு நாங்கள் வலியுறுத்துவோம் என்றனர். 


No comments:

Post a Comment