Wednesday, March 30, 2011

கேப்டன் தாக்குவது சித்தரிக்கப்பட்ட காட்சி: அடிப்பட்டும் திருந்தாத பாஸ்கர்


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று தர்மபுரி தொகுதியில் வேட்பாளர் ஏ.பாஸ்கரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.   அவர் பேசும் போது, தர்மபுரி தொகுதி வேட்பாளர் பாஸ்கர் பெயரை பாண்டியன் என்று கூறி விட்டதாகவும், அதை சுட்டிக் காட்டிய வேட்பாளர் பாஸ்கரை அவர் அடித்த தாகவும் தொலைக் காட்சிகளில் தகவல் வெளியானது.


ஆனால் விஜயகாந்த் தனது உதவியாளரை மைக் கை சரி செய்து கொடுக்காததால் அடித்ததாக மற்றொரு செய்தி வெளியானது.



தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் இது குறித்து,

’’தர்மபுரியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்த போது கேப்டன் பேசிய மைக்கில் பேட்டரி கழன்றி கீழே விழுந்தது.

அதை எடுத்து கொடுக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவர் எடுத்து கொடுத்த பின்பு தொடர்ந்து அவர் பேச ஆரம்பித்தார்.

மீண்டும் அந்த பேட்டரி கீழே விழுந்தது. அப்போதும் அதை எடுத்து கொடுக்க சொன்னார். உதவியாளர் எடுத்து கொடுத்த போது பேட்டரியை தான் அவர் கையால் 2, 3, முறை தட்டினார்.

ஆனால் வேட்பாளரை தாக்கிவிட்டார் என்று தவறாக தகவல் பரப்பி விடப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தின் போது நானும், பாலக்கோடு தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் கே.பி.அன்பழகனும் பிரசார வேனுக்குள் சீட்டில் அமர்ந்திருந்தோம்.

நான் கட்சி துண்டை கழுத்தில் அணிந்திருந்தேன். என் தலையிலும் முடி அதிகளவில் உள்ளது. ஆனால் விஜயகாந்த் தாக்கியது போல் காட்டப்பட்டது சித்தரிக்கப்பட்ட காட்சி. எனது வெற்றியை தடுக்க இது போன்ற ஒரு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.


இன்றைய பதிவுகள்...






    No comments:

    Post a Comment