கோ படத்தில் டைட்டில் போடும் பொழுது பின்னால் வரும் காட்சிகளுக்கு புகைப்பட கலைஞர்களின் உதவியை நாடி இருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
ஜீவா, கார்த்திகா, பியா மற்றும் அஜ்மல் ஆகியோர் நடித்து இருக்கும் திரைப்படம் கோ. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து இருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் வெளியீடாக இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.
கோ படத்தின் ஆடியோ வெளீயிட்டு விழாவில், அங்கு புகைப்படம் எடுக்க புகைப்பட கலைஞர்களை வைத்தே வெளியிட வைத்து பிரமிப்பை ஏற்படுத்தினார் கே.வி. ஆனந்த். அடுத்த கட்டமாக, இப்பொழுது தனது டிவிட்டர் இணையத்தில், "எனது கோ திரைப்படம் ஒரு புகைப்பட கலைஞனை பற்றிய படம். படத்தின் டைட்டிலில் போடும்போதே ரசிகர்களுக்கு அதை புரிய வைக்க வேண்டும். கோ படத்தில் டைட்டில் 3 1/2 நிமிடங்கள் வரும் . அதில் 100 புகைப்படங்களுக்கு மேல் உபயோகிக்க முடிவெடுத்துள்ளோம். ஆகையால் புகைப்பட கலைஞர்கள் தாங்கள் எடுத்த புகைப்படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள். அதிலிருந்து சிறந்தவற்றை நான் உபயோகப்படுத்தி கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.

No comments:
Post a Comment