திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கப் பொன்விழா, கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்தது. விழாவில் 50 இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர், பாடகிகள், 250 இசைக்கலைஞர்கள், இயக்குனர்கள், முன்னணி நடிகர், முன்னணி நடிகைகள் என தமிழ் திரையுலகமே கலந்து கொண்டது. எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் முதல் ஜி.வி.பிரகாஷ்குமார் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் இதில் கலந்து கொண்டனர். இதில் இசைஞானி இளையராஜா ‘ஆரம்ப காலத்தில் பாடல் கம்போஸிங்கின்போது என்னை உடனிருந்து ஊக்குவித்தவர் ஏ.ஆர்.ரகுமான் தந்தை சேகர் என மேடையில் மன நெகிழ பேசினார்.

No comments:
Post a Comment