இந்தி படமான 'டபாங்' தமிழ் ரீமேக்கை சிலம்பாட்டம் இயக்குனர் எஸ்.சரவணன் இயக்குகிறார்.
இந்தியில் வரவேற்பை பெற்ற சல்மான்கான் நடித்த டபாங் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. சல்மான்கான் நடித்த பாத்திரத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.
ரீமேக் படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்புகள் தமிழ் திரையுலகில் நிலவியது. அதற்கு முற்றுப்புள்ளியாக சிம்புவை வைத்து சிலம்பாட்டம் படத்தை இயக்கிய எஸ்.சரவணன் இயக்குகிறார்.
தமிழ் திரையுலகிற்கு ஏற்ப பல்வேறு மாறுதல் செய்து முழு திரைக்கதையையும் எழுதி முடித்து விட்டாராம். நாயகி தேடும் படலம் ஆரம்பித்து இருக்கிறார்கள். இப்படத்தை பாலாஜி ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது.
இப்போது ரீலீஸுக்கு தயாராக இருக்கும் 'வானம்' படத்தை அடுத்து 'போடா போடி', அதனை அடுத்து 'வேட்டை மன்னன்' என வரிசையாக கால்ஷிட் தேதிகள் கொடுத்து விட்டதால் 'போடா போடி' படத்தை முடித்தவுடன் டபாங் படத்தில் நடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறாராம்.

No comments:
Post a Comment