ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் சட்டப்படி குற்றம். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, நீதிக்கு தண்டனை போன்ற பல அரசியல் பேசும் படங்களை இயக்கியவர். இதில் விக்ராந்த், ஹரீஸ் கல்யாண், வசந்த் ஆகிய மூவர் நாயகர்களாகவும் பானு, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ, கோமல் சர்மா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.
சத்யராஜ், சுரேஷ், ராதா ரவி, லிவிங்ஸ்டன், இயக்குனர்கள் சீமான், ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர் சமீபத்தில் இயக்கிய படங்களும் சரி, தயாரித்த படமும் சரி பெரும் தோல்விகளையே சந்திதது. இந்நிலையில்தான் நடப்பு அரசியலை வைத்து சட்டப்படி குற்றத்தை எடுத்து வருகிறார். இளைஞர்கள் சமூக அவலங்களால் எப்படி கெட்டுப் போகிறார்கள் என்பதும், அவர்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுமே படத்தின் கதையாம்.
முக்கால்வாசி படத்தை அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கியிருப்பதாக சொல்கிறார் எஸ்ஏசி. தேர்தலுக்கு முன் படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதால் அவசர அவசரமாக படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. படத்தை இம்மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை விரைவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் கேசட்டை வெளியிடுமாறு ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டுள்ளார். இப்படம் அரசியல் விஷயங்களை சொல்வதாலும், தேர்தல் நேரம் என்பதாலும் ஜெயலலிதா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். இப்படதின் பாடல்களை ஜெயலலிதா வெளியிட நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
தன் அப்பா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் இல்லாமலா? ஆக, ஒரே மேடையில் ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் என மூவரும் இருப்பார்கள் என தெரிகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இப்படத்தை பொருத்தவரை தற்கால அரசியலை குறிவைத்து எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்தான் பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.
எல்லாம் ஓகே தான்!! ஆனா, இந்த படம் தேர்தலுக்கு பின் தான் வெளியிடப்படுகிறது. அப்படி இருக்கும் போது ஒருவேளை நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தல் அப்போது இந்த படம் ஆளும் கட்சியை குறிவைத்து எடுக்கப்பட்டதாக இருக்காதா...? வசனங்கள் ஜெயலலிதாவை சாடுற மாதிரி இருக்காதா...? ஏனென்றால் அரசியல் சம்பந்தமான எந்த திரைப்படங்களையும் மக்கள் எதிர்கட்சியை சாடுவதாக எடுத்துகொண்டது இல்லை. அது எப்பொழுதும் ஆளும் கட்சியின் ஆராஜகங்களை சொல்வதாகத் தான் மக்களால் புரிந்து கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்த படமும் அப்படித்தான் புரிந்து கொள்ளப்படும். அப்படி இருக்க இந்த படம் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் வந்தால் வெளிவருமா...? அல்லது பெட்டிக்குள் முடங்கிவிடுமா...? அல்லது சிரமங்களை தின்று படம் வெளி வருமா ..? படங்களுக்கு ஆளும் கட்சியால்(அதிமுக) கொடுக்கப்படும் தடைகளின் அனுதாபத்தை மீண்டும் அரசியலாக்கி விஜயை அரசியலுக்குள் மீண்டும் திணித்து அவரை இல்லாமல் செய்ய போகிறாரா...?(எப்படியும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விஜய் என்ற நடிகனை சல்லடை வைத்து தான் தேட வேண்டி வரும் ) பொறுத்திருந்து பார்ப்போம்....!!

No comments:
Post a Comment