எஸ்.ஏ.சி யின் சட்டப்பட குற்றம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. அவர் வருவார் என்று நம்பியிருந்ததால் முன்னணி நடிகைகள் யாரையும் விழாவுக்கு அழைக்காமலிருந்தார்களாம். இப்போது கடைசி நேரத்தில் யாரையாவது அழைத்தாக வேண்டுமே? த்ரிஷா ஊரில் இல்லை. அதனால் அனுஷ்காவை வரச்சொல்லி கேட்டிருக்கிறார்களாம்.
ரெண்டு என்ற படத்தின் மூலம்தான் தமிழில் முதலில் அறிமுகமானார் அனுஷ்கா. இப்படத்தை இயக்கியது எஸ்.ஏ.சி. அந்த உரிமையில்தான் இப்படி திடீர் அழைப்பு விடுத்தாராம் அவர். இந்த அழைப்பை ஏற்று வருகிற 14 ந் தேதி கமலா தியேட்டரில் நடைபெறப் போகும் விழாவுக்கு வருவதாக உறுதியளித்திருக்கிறாராம் அனுஷ்கா.
இதற்கிடையில் படத்தில் இடம் பெறும் வசனம் ஒன்றை சத்யராஜ் பேசியிருக்கிறார். அது நேரடியாகவே ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல இருக்கிறது. இந்த தேர்தலில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சி யின் ஆதரவு ஜெ.வுக்கு இருக்கிறது ஓகே. அது காலத்தின் கட்டாயம். ஆனால் இந்த டயலாக்கை மறுப்பே சொல்லாமல் பேசியிருப்பதால் சத்யராஜின் ஆதரவும் ஜெ.வுக்கு இருக்குமோ என்று சந்தேகத்தை எழுப்புகிறார்கள் கோடம்பாக்கத்தில். அப்படி என்ன பொல்லாத டயலாக் அது? இக்கட்டுகளை கடந்து சந்தோஷத்தை எட்டப்போகும் நேரத்தில் சத்யராஜ் இப்படி சொல்வாராம்.
"இனிமே நம்ம எல்லாருடைய வாழ்க்கையும் ஜெ.ஜென்னுதான் இருக்கப் போவது!"
ரஜினிய தாக்குற மாதிரி வசனம் வைக்கல்லையா....? வச்சீங்கன்னா சம்பளம் வாங்காம இலவசமாகவே நடிச்சு கொடுத்திருப்பார்....

No comments:
Post a Comment