நடிகர் ஜீவா இரட்டை வேடத்தில் நடித்து, சில தினங்களுக்கு முன்னர் ரிலீசாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் சிங்கம் புலி. இப்படத்தை புதுமுக டைரக்டர் சாய்ரமணி இயக்கியுள்ளார். படம் ரிலீசாகி ஒருவாரம் கூட ஆகவில்லை அதற்குள் திருட்டு வி.சி.டி.க்கள் மற்றும் டி.வி.டி.க்கள் விற்பனை துவங்கி விட்டது. இதனை தடுக்க வலியுறுத்தி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்க வந்தார் நடிகர் ஜீவாவும், டைரக்டர் சாய்ரமணியும்.
கமிஷனரிடம் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, இந்தபடம் கிட்டத்தட்ட ஓன்றரை ஆண்டுகளாக, பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. படம் திரைக்கு வந்து ஒருவாரம்கூட ஆகவில்லை. அதற்குள் கோவில், பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் வி.சி.டி.க்கள் மற்றும் டி.வி.டி.க்களை கூவி, கூவி விற்கின்றனர். இதனால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். ஆகவே இதனை தடுக்க கோரி கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். நம்மூரில் தான் இப்படி திருட்டு சி.டி.க்கள் விற்பனையாகிறது. அமெரிக்க போன்ற நாடுகளில் இதுபோன்று பார்க்கவே முடியாது. அதுபோல நம்மூரிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.

நன்றாக உள்ளது
ReplyDelete