நானே என்னுள் இல்லை படத்தில் அறிமுகமானவர் அமரேஷ் கணேஷ். முன்னள் வெற்றி நாயகி ஜெயசித்ராவின் ஒரே வாரிசான அமரேஷ் மல்ட்டி டேலண்ட் இளைஞர். ஆனால் அவர் அறிமுகமான படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. அந்தப் படத்துக்கு இவரே இசையமைத்திருந்தார். அதில் சில பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. இசையமைத்ததோடு நில்லாமல் இரண்டு பாடல்களையும் எழுதினார் .
அறிமுகப் படம் விழுந்ததைப் பற்றிக் கவலைப்படாத அமரேஷின் அம்மா ஜெயசித்ரா, இம்முறை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் மகனை வைத்துப் படம் தயாரிக்க இறங்கிவிட்டார். இந்தத் தடவை இவர் இயக்கவில்லையாம்.
அதெல்லாம் போகட்டும் செய்தியின் சூடான பகுதிக்கு வருவோம். இந்த இரு மொழிப் படத்தில் அமரேஷூக்கு தமன்னாவும், அனுஷ்காவும் ஜோடி சேர சம்மதித்திருக்கிறார்கள் என்பதுதான் ஹாட் நியூஸ். முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் ஓகே சொல்லியிருக்கும் அவர்கள், இன்னும் ஒப்பந்ததில் கையெழுத்துப் போடவில்லையாம். இரண்டு பேருமே தெலுங்குப் படங்களின் பாடல் காட்சிக்காக வெளிநாடு சென்றிருக்கிறார்கள். வந்ததும் அவர்களுக்கு அட்வான்ஸ் தரப்படுமாம். வழக்கமாக இவர்கள் வாங்கும் சம்பளத்தை விட 10% சதவீதம் கூடுதல் சம்பளம் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
நமது ஆச்சரியமெல்லாம். மகனின் முதல் படத்துக்குக் காசை எண்ணி எண்ணி செலவு செய்த ஜெயசித்ரா, இம்முறை இரண்டு பெரிய கதாநாயகிகளுக்கு எப்படி இரண்டரை கோடி சம்பளமாக கொடுக்க முன்வந்தார் என்பதுதான்!

No comments:
Post a Comment