சமீபத்தில் ராவணன் படத்தின் மூலம் விக்ரம், ரத்த சரித்திரம் படத்தின் மூலம் சூர்யா என இருவரும் இந்தி திரையுலகில் நுழைந்தார்கள். இதனை அடுத்து கோடம்பாக்கத்து நடிகர்கள் பலரும் இந்தியில் நுழைய இருக்க, அதற்கு முன்னோட்டமாக சிம்பு ஒரு இந்தி மியூசிக் வீடியோவில் நடிக்க இருக்கிறார்.
சிம்பு நடித்து வரும் வானம் படத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிம்பு எழுதிப் பாடியிருக்கும் ‘எவண்டி உன்னை பெத்தான். என் கையில கிடைச்சா செத்தான்' என்ற பாடலை, இந்தியின் முன்னனி ஆடியோ நிறுவனமான வீனஸ், இந்தியில் மியூசிக் வீடியோவாகத் தயாரிக்க முன்வந்துள்ளது. அதில் நடித்துத் தருமாறு வீனஸ் கேட்டவுடனேயே ஒ.கே. செய்து இருக்கிறார் சிம்பு.
இந்தப் பாடலுக்கு நடனம் அமைக்க இருப்பவர் இந்தி டான்ஸ் மாஸ்டரான அகமத் கான். இந்தியில் அந்த பாடலை தனது சொந்த குரலில் பாடவும் செய்து இருக்கிறார் சிம்பு. இந்தப் பாடலின் தமிழ், இந்தி ஆகிய இரண்டு பதிப்புகளையும் இப்போது மும்பையில் ஷூட் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தி வீடியோவை எல்லா சேனல்களிலும் ஒளிபரப்ப இருக்கிறது வீனஸ்.
இந்த வீடியோ மூலம் இந்தி மக்களிடம் பிரபலமாகி விட்டால், அவர் இந்தியில் நாயகனாக அறிமுகமாகும் வேட்டை மன்னன் படத்தின் மூலம் எளிதாக இந்தி திரையுலகில் கால் பதித்துவிடலாம் என்பது சிம்பு வியூகமாம்.

No comments:
Post a Comment