தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று(13.04.11) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைவரும் ஓட்டுபோடுவதற்காக இந்த நடைமுறையை பின்பற்றப்படுகிறது. அதேபோல் தியேட்டர்களிலும் இன்று காலை மற்றும் மதிய நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில், அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்று நோக்த்தில் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் ஊழியர்களும் ஓட்டளிக்க வழி செய்யப்பட்டுள்ளது. மாலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகள் வழக்கம் போல இடம் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment