பெருவாரியான இடங்களில் காங்கிரஸ்-தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி உறுதியாகி விட்டது; ஓட்டுப்போட்டு விட்டு இளங்கோவன் பேட்டி
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது மனைவி வரலட்சுமியுடன் வந்து ஓட்டு போட்டதும் நிருபர்பகளுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’இந்த தேர்தலில் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஓட்டுப்போட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் ஓட்டுப்போட வரிசையில் நிற்பது நல்ல விஷயம்.
தேர்தல் கமிஷன் எந்தவித பாரப்பட்சமும் இல்லாமல் செயல்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. அவர்கள் இன்னும் கடுமையாக செயல்பட்டு இருக்கலாம். இருப்பினும் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.
இந்த தேர்தலில் மக்களுக்கு நல்லது செய்யும் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெறும். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தமிழ்நாட்டில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது’’ என்று கூறினார்.
பேட்டியின்போது தங்கபாலு வெற்றி பெறுவாரா? என்று நிருபர்கள் கேட்டபோது, இது பற்றி தேர்தலுக்குப் பிறகு சொல்கிறேன் என்று இளங்கோவன் கூறினார்.

No comments:
Post a Comment