இன்றோடு முடிகிறது தேர்தல் பிரச்சாரம். சிரிப்பு நடிகர் வடிவேலு தவிர, மார்க்கெட்டில் இருக்கிற நடிகர்கள் யாரும் எந்த கட்சியையும் ஆதரித்து பிரச்சாரத்தில் இறங்கவில்லை. நடிகர் விஜய் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு இரண்டு நாட்கள் முன்பாகவாவது ஜெயா டி.வி யில் தோன்றி ஒரு காரசாரமான பேட்டி கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்தார்கள் விஜய் மக்கள் மன்றத்தினர். ஆனால் அதை கடைசிவரைக்கும் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை விஜய். இந்த நிலையில் நடிகர் பிரசாந்த் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் அசன் முகமது ஜின்னாவை ஆதரித்து பிரச்சாரத்தில் குதித்தார். (பிரசாந்த் மார்கெட்டில் இருக்கிறாராக்கும் என்று கேட்பவர்களுக்கு நம்மிடம் பதில் இல்லை)
நடிகர் பிரசாந்த் 10-04-11 அன்று பார்த்தீஸ்வரன் காலனி, சூளைமேடு, நமச்சிவாயபுரம், கோபாலபுரம், தாமஸ் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். கலைஞர் அரசின் திட்டங்கள் தொடரவும், சென்னை நகரம் மேலும் மேம்பாடு அடையவும் ஜின்னாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். கலைஞரிடம் மு.க.ஸ்டாலினிடமும் உங்கள் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி தீர்வு கிடைக்கச் செய்யும் ஆற்றலுடைய இளைஞர்தான் ஜின்னா என்று பிரசாந்த் பிரச்சாரம் செய்தார்.
பிரசாந்திடம் இருக்கிற தைரியம் கூட விஜய்யிடம் இல்லையே என்று முணுமுணுக்கிறார்கள் அவரது ரசிகர்கள். (இப்படி உசுப்பி உசுப்பியே ரணகளமாக்கிடுவாங்க என்பது அவருக்கு தெரியாதா என்ன?)

No comments:
Post a Comment