ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
இந்த சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் மதிமுகவினரின் வாக்குகள் யாருக்கு என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார் வைகோ. காலை ஓட்டுப்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் ஓட்டுச்சாவடிக்கு
வந்த வைகோ ஓட்டு போட வரிசையில் காத்திருந்தார். பின்னர் தனது வாய்ப்பு வந்ததும் அவர் உள்ளே சென்று ஓட்டுப் போட்டார்.
ஓட்டுப் போட்ட பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. ஆனாலும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதால் அதை முறையாக செய்துள்ளேன் என்றார்.
தான் யாருக்கு வாக்களித்துள்ளேன் என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

No comments:
Post a Comment