அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.பட்ஜெட் கூட்டத் தொடரை 11-ந்தேதி தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது.முதல் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். அதன் பிறகு துறை வாரியாக நிதி ஒதுக்கும் வகையில் கூட்டத் தொடர் நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் ஒரு துறை என்ற அளவில் விவாதங்கள் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாட்கள் வரை நடத்தப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதிகளை பெற்று பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று சந்திக்கிறார். மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் கூடுதல் நிதிகள் மூலமாக பல துறைகளில் புதிய திட்டங்களை செயல் படுத்தவும் உத்தேசித்துள்ளனர்.

No comments:
Post a Comment