அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள இலவச பேன், மிக்ஸி, கிரைண்டர் ஆகிய பொருள்கள் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்த பொருட்கள் ரேஷனில் இலவச அரிசி மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் அரிசி பெறும் கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
`இலவச அரிசி பெறும் கார்டுதாரர்கள்’ என்ற அளவீட்டின் அடிப்படையில் இலவச பேன், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்கள் வழங்குவதற்காக, மாவட்ட அளவில் கணக்கீடுகளை சேகரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகின்றது.
இதற்காக மாவட்ட அளவில் அரிசி பெறும் கார்டுகள் பற்றிய விவரங்கள் அரசால் கேட்கப்பட்டுள்ளன.
அரசினால் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும் பேன், மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருள்கள் அனுப்பப்படும்போது, நுகர்பொருள் வாணிபக்கழக கிட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment