நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப்ரல் மாதம் 29ந் தேதி ராணா' படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது அவருக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து, சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் டாக்டர்கள், அவரை முழுமையாக பரிசோதனை செய்ததில் அவருடைய நோய்க்கான மூலகாரணத்தை கண்டுபிடித்து, சிகிச்சை அளித்தார்கள். அதன்பிறகு ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சகஜநிலைக்கு திரும்பியது. சாதாரண உணவை சாப்பிட்டார். மருத்துவமனை வளாகத்தில் நடைபயிற்சி செய்தார். டி.வி.யில் தமிழ் படங்களை பார்த்தார்.
ரஜினிகாந்த் இன்னும் 4 நாட்களில் சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்' செய்யப்படுகிறார். என்றாலும், அவர் சிங்கப்பூரிலேயே சில வாரங்கள் தங்கியிருந்து, உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று வரவேண்டியதிருக்கும். இதற்காக சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்திருக்கிறார்கள். மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் ரஜினியுடன் தங்கியிருப்பார்கள்.
10.06.2011 அன்று ரஜினிகாந்த் செல்போன் மூலம் சென்னையில் உள்ள டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருடன் பேசினார். அப்போது, மிக விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்' செய்யப்படும் தகவலை தெரிவித்தார். ராணா' படவேலைகள் எந்த நிலையில் உள்ளன என்பது பற்றியும் அவர் விசாரித்தார். அவரிடம், உங்கள் உடல்நிலையை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் உடல்நிலை முழுமையாக தேறியபின் ராணா' படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம்' என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

No comments:
Post a Comment