சென்னையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் உயர்நிலை செயல்திட்டக்கூட்டம் நடந்தது.இன்றைய கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன
செயல்திட்டக்கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, தேர்தல் தோல்விக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு காரணம் அல்ல. 2ஜி வழக்கில் காங்கிரஸ் எங்களுக்கு உதவில்லை என ஏமாற்றமடையவில்லை,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலக மாட்டோம் என கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில், தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு 2ஜி ஊழல்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது என கேட்டபோது,
அக்கருத்தை நிராகரிப்பதாக கருணாநிதி தெரிவித்தார்.

No comments:
Post a Comment