தனது மகனை ஹீரோவாக்க முடிவு செய்த நடிகர் விஜயகாந்த் இன்னுமொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். தேமுதிக தலைவர், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் என முழுநேர அரசியலில் விஜயகாந்த் இறங்கிவிட்டதால், அவரது வாரிசுகள் சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்க இருப்பதும், அதில் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதும் அனைவரும் அறிந்த செய்தியே. கேப்டனின் வாரிசுக்காக அவரது மனைவி பிரேமலதா, விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டவர்கள் கதை கேட்டு வருவதும் தெரிந்திருக்கலாம். இதில் ஹைலைட் மற்றும் லேட்டஸ்ட் என்னவென்றால், விஜயகாந்தின் வாரிசு சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தை, விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,வும், பிரபல தயாரிப்பாளருமான மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, அதில் ஹீரோவாக சண்முக பாண்டியன் களமிறங்க இருக்கிறார்.

No comments:
Post a Comment