தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் முறைகேடு மூலம் வெற்றி பெற்று விட்டதாகவும், எனவே அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இது பற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-
2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெற்றது பற்றி தமிழக முதல்- அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது கட்சி வேட்பாளர் ராஜகண்ணப்பன் தேர்தல் தொடர்பாக தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருப்பது அவருக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
இந்த நிலையில் அவர் தெரிவித்துள்ள கருத்து கோர்ட்டு அவமதிப்பு ஆகும் என்று கூறினார்.

No comments:
Post a Comment