தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது.
சட்டசபை தேர்தலுக்காக, மார்ச் 30ல், திண்டுக்கல் மாவட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, அதிகளவு வாகனங்கள் பின் தொடர்ந்தது; விதிகளை மீறி அதிக நேரம் பேசியது; நெரிசலுக்கு காரணமாக இருந்ததாக, ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, தாடிக்கொம்பு, செம்பட்டி போலீசார், நான்கு வழக்குகளை பதிவு செய்தனர்.
இவ்வழக்குகளில் ஏற்கனவே அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால், மீண்டும் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.
மனு, நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வக்கீல்கள் வி.டி.பாலாஜி, காமேஸ்வரன், அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் ராஜராஜன் ஆஜராயினர். பிரேமலதாவுக்கு முன்ஜாமின் வழங்கிய நீதிபதி, 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் சரணடையவும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment