சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று மருத்துவமனையில் இருந்து டிச்சார்ஜ் ஆகிவிட்டார். மேலும் சிகிச்சை இருப்பதால் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது உடல்நிலை குறித்து தெரிவித்தார்.
இதையடுத்து திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார். தமது உடல் நலம் குறித்து கலைஞரிடம் தொலைபேசியில் ரஜினிகாந்த் விவரித்தார்.
உடல்நலம் தேறி ரஜினி விரைவில் சென்னை திரும்ப விருப்பம் தெரிவித்தார் கலைஞர்.
கலைஞரிடம், நீங்கள் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகளை, மேடு பள்ளங்களையெல்லாம் சந்தித்தவர். உங்கள் உடல்நலம் பேணுவதுதான் முக்கியம். எது பற்றியும் பெரிதாக கருதாமல் இருக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

No comments:
Post a Comment