உடல் நலக்குறைவால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு, ஆசியாவிலேயே பெரிய மருத்துவமனையான மவுண்ட், எலிசபெத் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் டாக்டர்கள் தேவை இல்லை என்று கூறி விட்டனர். தீவிர சிகிச்சைக்கு பின் சிறுநீரக செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது பூரண குணமடைந்து விட்டார்.
இதையடுத்து டாக்டர்கள் ரஜினியை நேற்று டிஸ்சார்ஜ் செய்தனர். தன்னை கவனித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு நன்றி தெரிவித்து ரஜினி ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டார்.
சில வாரங்கள் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து சிங்கப்பூரிலேயே அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு பார்த்து ரஜினி அங்கு தங்கி இருக்கிறார். மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோரும் உடன் இருக்கிறார்கள்.
ரஜினிக்கு இன்று அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன. டி.வி. நிகழ்ச்சிகளையும் பார்த்தார். பழைய மாதிரி உற்சாகமாக இருக்கிறார்.
டிஸ்சார்ஜ் ஆனதை தொடர்ந்து ராணா பட வேலைகள் தீவிரமாகி உள்ளன. இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரிடம் தொடர்பு கொண்டு பேசி கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இப்படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஒவ்வொரு வேடத்திலும் எவ்வாறு நடிப்பது என்பது குறித்து விவாதித்து வருகிறார். சென்னை திரும்பியதும் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

No comments:
Post a Comment