தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து அங்கு சுயேச்சையாகப் போட்டியி்ட்ட ஜெயந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஜெயந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், நான் ரிஷிவந்தியம் சட்டசபைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட தீர்மானித்து வேட்பு மனுவைத் தயாரித்து வைத்திருந்தேன்.
இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவராஜ் எனது வேட்பு மனுவைப் பறித்துச் சென்று விட்டார். அவரது குறுக்கீட்டால் என்னால் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முடியாமல் போய் விட்டது.
எனவே இத்தொகுதி தேர்தல் முடிவை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயந்தி.

No comments:
Post a Comment