மகான்களுக்கு மட்டுமே வருகிற ஆசை அது. மஹா நிர்வாணம்! தமிழ்சினிமாவில் நிர்வாணங்களுக்கு இருக்கிற மரியாதையை மோட்சம் வெற்றி தியேட்டர்களுக்கு போனால் லைவ்வாக ரசிக்கலாம். ஆனால் அதுவே ஆண்களின் நிர்வாணம் என்றால் ஐயகோ என்று ஓடிப்போவார்கள் ரசிகர்கள்.
அப்படியிருந்தும் இந்த வாரமும், அடுத்த வாரமும் திரைக்கு வரவிருக்கும் இரு படங்களில் இந்த மஹா நிர்வாணம் இடம் பெற்றுள்ளதாம். ஆரண்ய காண்டம் படத்தில் ஜாக்கி ஷெராப்பின் நிர்வாண காட்சி இடம் பெற்றுள்ளதாம். முதலில் இதற்கு அனுமதி மறுத்த சென்சார், மறு தணிக்கைக்கு பின்பு அனுமதி கொடுத்திருக்கிறது.
அடுத்த வாரம் வெளிவர இருக்கும் அவன் இவன் படத்தில் பிரபல இயக்குனர் ஜி.எம்.குமார் நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். சுமார் மூன்று நாட்கள் இந்த காட்சியை படமாக்கியிருக்கிறார் பாலா. அத்தனை நாட்களும் நிர்வாணமாகவே திரிந்தாராம் மனுஷன்.
இந்த படத்தின் பிரஸ்மீட்டில் யாருக்கு விருது கிடைக்குதோ, இல்லையோ. குமாருக்கு தேசிய விருது நிச்சயம் என்று கிசுகிசுத்தார்கள் யூனிட்டை சேர்ந்தவர்கள். அது இந்த மஹா நிர்வாணத்திற்காக என்பதுதான் இப்போதைய ஆச்சர்யம்.
No comments:
Post a Comment