இந்தியாவுடனான விவகாரங்களை இந்திய மத்திய அரசுடன் மட்டும்தான் இலங்கை கையாளுமே தவிர மாநில அரசுடன் கையாளாது என்று இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை இந்தியா கொண்டுவரவேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றை தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றியது.
இதுதொடர்பாக இலங்கையின் கருத்து என்ன என்று இலங்கை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர்,
இந்தியாவும் இலங்கையும் வெவ்வேறான அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களை கொண்டிருக்கும் வேளையில், இவற்றினால் ஏற்படக்கூடிய முரண்பாடுகளை இந்திய மத்திய அரசாங்கத்துடன்தான் கையாளுவோமே தவிர மாநில அரசுகளுடன் அல்ல என்று கெகலிய கூறியுள்ளார்.

No comments:
Post a Comment