7வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாபா ராம்தேவின் உடல் நிலை மோசமடைந்தையடுத்து அவரை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கறுப்புப் பணத்துக்கு எதிராக டெல்லியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், பொது மக்களுடன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த ராம்தேவை, அங்கிருந்து வலுக்கட்டாயமாக அகற்றி ஹரித்வாரில் உள்ள அவரது ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டது.
இருப்பினும் அங்கும் அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். இன்றுடன் 7வது நாளை எட்டியது ராம்தேவின் உண்ணாவிரதம். அவரது உடலை இன்றுப் பரிசோதித்த டாக்டர் யோகேஷ் சந்திர சர்மா கூறுகையில், ராம்தேவின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அவரது இதயத்திற்கு அழுத்தம் அதிகரிக்கும். அவரது உடல் நிலை கவலைக்கிடமாகி வருகிறது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். ராம்தேவுடன் 183 பேர் பதஞ்சலி ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் நிலையும் கவலைக்கிடமாகியுள்ளது என்றார்.
டாக்டர்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து ராம்தேவ் பழச்சாறு, எலுமிச்சை சாதம், தேன் உள்ளிட்டவற்றை சாப்பிட ஆரம்பித்தார். ஆனாலும் அவரது உடல் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந் நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி இன்று பகல் 3 மணிக்கு ஆசிரமத்துக்கு வந்த போலீசார், அவரை வலுக்கட்டாயமாக டெஹ்ராடூன் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.
முன்னதாக ராம்தேவை சந்தித்து அவரை சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெற வைப்பதற்காக வாழும் கலை நிபுணர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஹரித்வார் விரைந்தார். உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தனது போராட்டத்தை ராம்தேவ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க இருந்தார் ரவிசங்கர். ஆனால், இந்தச் சந்திப்பு நடப்பதற்குள்ளாகவே ராம்தேவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிட்டது.
அதே போல ராம்தேவின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க மத்திய அரசு மனித நேய அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரேவும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராம்தேவ் ஆசிரம சொத்து மதிப்பு ரூ.1100 கோடி:
இதற்கிடையே ராம்தேவின் சொத்து மதிப்பு ரூ. 1100 கோடி என்று தெரிய வந்துள்ளது.
நேற்று அவரும் அவரது உதவியாளர் ஆச்சார்ய பால்கிருஷ்ணாவும் சேர்ந்து சொத்துக் கணக்கு என்று ஒன்றை அறிவித்தனர். முழுமையான சொத்துக் கணக்காக அது இல்லை. இருப்பினும் அவர்கள் சொன்ன கணக்குப்படி ராம்தேவின் சொத்து மதிப்பு ரூ.1100 என்று தெரிய வந்துள்ளது.
சொத்துக் கணக்கை வெளியிட்டுப் பேசிய ராம்தேவ் கூறுகையில்,நான் மோசடி செய்யவில்லை. பொதுமக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை. எனது சொத்துக்கள் வெளிப்படையானவை. அதை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்றார் ராம்தேவ்.
ராம்தேவைத் தலைவராக கொண்ட பதஞ்சலி யோகபீடத்தின் கீழ் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிகிறது. ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் உள்ளன. இதன் மூலம் கிடைத்த வருமானமும் பலர் கொடுத்த நன்கொடை மூலமும் சொத்துகள் வந்துள்ளன.
அவற்றில் முக்கியமானவை பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளை, திவ்யா யோகா அறக்கட்டளை, வேதிக் பிராட்காஸ்ட் லிமிடெட், ஆஸ்த்தா தொலைக்காட்சி உள்ளிட்டவை அடங்கும்.
பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளை சார்பாக தயாரிக்கப்படும் பொருள்களில் முக்கியத்துவம் வாய்ந்தது அம்லா, ஆலோவேரா ஜூஸ் (பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட ஜூஸ்), இந்த இரண்டு பொருட்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு (2008-2009ம் ஆண்டு) ரூ. 25 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
மேலும் மூலிகை பொருட்கள் தயாரித்தல், தைலம், அழகு சாதன பொருள்கள் அனைவராலும் விரும்பி வாங்கப்படுபவையாகும். பதஞ்சலி நிறுவனத்திற்கு சில்லறை வியாபாரிகள் மூலம் 95 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகை கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேதா அறக்கட்டளையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய தம்பதிகள் (சர்வான்சாம்- சுனிதா) பெரும் பங்குதாரர்கள். இவர்கள் யோகா பீடத்திற்கு ஸ்காட்லாந்தில் ஒரு தீவை (900 ஏக்கர்) அன்பளிப்பாக வழங்கி உள்ளதாகவும், இந்த தீவில் யோகா மையம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment