நானா? ராஜேந்தரை கிண்டலடிக்கிற மாதிரி நடித்திருக்கிறேனா? ஏன் சார் வதந்தியை கிளப்புறீங்க? எப்பவும் அவர் மேல மரியாதை வச்சுருக்கிற ஆள் நான். இப்படி அலறாத குறையாக பேச ஆரம்பிக்கிறார் ஜித்தன் ரமேஷ். 'பிள்ளையார் தெரு கடைசி வீடு' படத்தில் ராஜேந்தர் ரசிகனாக நடித்திருக்கிறார் அவர். வீராச்சாமி பட டிவிடியை தனது காரிலேயே வைத்துக் கொண்டு கவலை வரும்போதெல்லாம் பார்த்து ரசிக்கும் ஹீரோக்களும் இதே கோடம்பாக்கத்தில்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ரமேஷின் வார்த்தைகளில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? இப்படி நாம் யோசித்தாலும்,
பக்கத்திலேயே அமர்ந்திருந்த அப்படத்தின் இயக்குனர் திருமலை கிஷோர் சத்தியம் செய்யாத குறையாக பேச ஆரம்பித்தார். இந்த படத்தில் ஜித்தன் ரமேஷை ராஜேந்தர் ரசிகராக நடிக்க வைக்க நினைச்சதுமே நான் அவரை நேரில் பார்த்து அனுமதி வாங்கிடனும்னு நினைச்சேன். அதுக்காக அவரை பார்க்க போயிருந்தேன். முதல்ல தயங்கினார். வேண்டாம்... இப்படிதான் பல பேர் என்னை ஒரு காமெடியன் மாதிரி சினிமாவில் காட்டுறாங்க என்று வருந்தினார்.
ஒரு காலத்தில் அவருடைய படங்கள் எல்லாமே தமிழ் சினிமாவின் கலெக்ஷன் மையமாகவும் டிரெண்ட் செட்டராவும் இருந்திருக்கு. அவருடைய பாடல்களை கேட்டுதான் சினிமா மீதே எனக்கு ஆர்வம் வந்திச்சு. படிக்கிற காலத்தில் அவருடைய படங்களை பார்க்க பல மணி நேரம் க்யூவில் நின்னுருக்கேன். இதையெல்லாம் அவரிடம் எடுத்துச் சொல்லி உங்களை எந்த இடத்திலும் கிண்டல் செய்யுற மாதிரி எடுக்க மாட்டோம்னு சொன்னேன். அதற்கு பிறகு அவர் எங்களை நம்பினார்.
படம் முடிஞ்சதும் சிம்புவை வரவழைச்சு போட்டு காட்டினோம். ரொம்ப பிரமாதமா இருக்கு என்று பாராட்டினார். சிம்பு மட்டுமில்ல, டைரக்டர் ஜனநாதன், பார்த்திபன் போன்றவர்களுக்கும் போட்டு காட்டினோம். கடைசி இருபது நிமிட க்ளைமாக்சை பார்த்து அழாதவங்களே கிடையாது என்றார் திருமலை கிஷோர்.

No comments:
Post a Comment