பில்லா 2 படத்தை இயக்கவிருந்த விஷ்ணுவர்த்தன் மீண்டும் ஒருமுறை அஜீத்தின் குட் புக்கிலிருந்து கிழிக்கப்பட்டிருக்கிறார். மங்காத்தாவுக்கு முன்பே இன்னொரு படத்தில் இவருடன் கூட்டணி வைக்க தயாராக இருந்தார் அஜீத். ஆனால் விஷ்ணு கேட்ட சம்பளம், அஜீத்தின் சம்பளத்தோடு சேர்ந்து ரிசர்வ் பேங்கின் ஒரு புளோரை ஆக்ரமிக்கிற அளவுக்கு இருந்ததால் ஆளை விடுங்க சார் என்று ஓடிப்போனார்கள் சில தயாரிப்பாளர்கள்.
அதன்பின் விஷ்ணுவையும் வேண்டாம் என்று தவிர்த்தார் அஜீத். அவர் எடுப்பதாக இருந்த பில்லா-2 படத்தையும் உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி வசம் ஒப்படைத்தார்.
முன்பு வெளிவந்த பில்லா படத்தில் அஜீத் கோட் சூட் போட்டுக் கொண்டு கேட் வாக் போவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், மனுஷன் என்னா பர்சனாலிடி என்று ரசிகர்களை ஏங்க வைத்தது நீரவ்ஷாவின் ஒளிப்பதிவுதான். அப்படியே அவர் நயன்தாராவை காட்டிய விதமும் ஒரே புல்லரிப்பு! பேட்சுலர் ரூம்களில் இந்த நயன்தாராவை சுவற்றில் ஒட்டி அந்த டூ பீஸ் அழகை கும்பிடுவதற்காகவே குப்புற கிடந்தார்கள் ஏராளமான இளைஞர்கள்.
அந்த படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் நீரவ்ஷா என்றே கருதினார்கள் அத்தனை பேரும். அப்படியிருந்தால் பில்லா-2 ல் அவர்தானே கேமிராமேனாக பணியாற்ற வேண்டும்? அதுதான் இல்லையாம். பலத்த போட்டிகளுக்கு இடையில் இந்த வாய்ப்பை தட்டிச் சென்றிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.
இதற்கு அஜீத்தின் சம்மதமும் பரிபூரணமாக அமைந்துவிட்டதுதான் சிறப்பு.

No comments:
Post a Comment