ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் ஆ.ராசாவைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டார். கடந்த 20-ந்தேதி முதல் அவர் டெல்லி திகார் ஜெயிலில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனுக்கள் சி.பி.ஐ. கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் நிராகரிக்கப்பட்டு விட்டது.
அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தயாநிதிமாறனுக்கு எதிராகவும் புகார்கள் எழுந்துள்ளது. ஏர்செல் நிறுவன முன்னாள் அதிபர் சிவசங்கரன் தயாநிதி மாறனுக்கு எதிராக சி.பி.ஐ. முன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. ரகசியமாக தனது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் நடவடிக்கைகள் தி.மு.க.வுக்கு எதிராக இருப்பதால் கட்சி தலைமை கவலை அடைந்துள்ளது. தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி ஆலோசனை நடத்த கட்சியின் உயர் நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னையில் இன்று அவசரமாக கூடயது. மாலை 4.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டம் நடந்தது.
இதில் உயர்நிலை குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், எம்.பி., எம்.எல். ஏ.க்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டர். கனிமொழியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டம் நடைற்றதால் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விபரம்:-
* கனிமொழி வழக்கில் சி.பி.ஐ.க்கு தி.மு.க. கண்டனம்.
* காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. தொடர்ந்து நீடிக்கும்
* சட்டமேலவை ரத்து செய்யப்பட்டதற்கு தி.மு.க. உயர்மட்ட செயற்திட்டக்குழு கண்டனம்.
* உயர்நீதி மன்ற தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலே நடைமுறை படுத்த வேண்டும்.
* இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரும் தீர்மானத்தை தி.மு.க. வரவேற்கிறது.
* தீர்மானங்களை விளக்கி ஜுன் 20-ந்தேதி முதல் ஜுன 30-ந்தேதி வரை பொதுக்கூட்டம்
* ஜுலை மாதத்தில் தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட உயர்மட்ட செயற்திட்டக்குழு முடிவு.

No comments:
Post a Comment