ராணா படத்தின் படப்பிடிப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதலில் இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பிறகு போரூர் ராமச்சந்திரா மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் உடல்நலம் தேறி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணம் அடைந்து தமிழகம் திரும்ப இதுவரை பல்வேறு கோவில்களில் அவரது ரசிகர்கள் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் செய்தனர். அந்த வரிசையில் வரும் 13.06.2011 அன்று மாலை 4.30 மணிக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ளும் சர்வ மத பிராத்தனை தஞ்சை திலகர் திடலில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment