இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட போரில் அப்பாவித் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவத்தினரால் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பல்வேறு விதங்களில் மனித உரிமை மீறலுக்கு உட்படுத்தப்பட்டு போர் குற்றம் புரிந்ததாக ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய உயர்மட்டக் குழு 10.06.2011 அன்று கொழும்பு சென்றுள்ளது.
இந்திய உயர்மட்டக் குழுவின் இரண்டு நாள் பயணத்தின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
கொழும்பு செல்வதற்கு முன்னர் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவசங்கர மேனனிடம், பயணத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சிவசங்கரமேனன், புறப்பட்டுச் செல்கிறோம். வந்த பிறகு என்ன நடந்தது என்று கூறுகிறோம் என்றார்.

No comments:
Post a Comment