இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2011-2013ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில், பாரதிராஜாவை தலைவராக முன்னிறுத்தி நானும், இன்னும் சில முன்னணி இயக்குநர்கள், இணை, துணை, உதவி இயக்குநர்கள் மற்ற பதவிகளில் போட்டியிட இருந்தோம்.
எங்களுக்கு எதிராக, அமீரைத் தலைவராக முன்னிறுத்தி சேரன், ஜனநாதன் மற்றும் சில முன்னணி இயக்குநர்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த சூழலில்..
கடந்த 40 ஆண்டுகளாக எங்களது இயக்குநர் சங்கத்தில் எந்தவித கரத்து வேறுபாடுகளும், பிளவுகளும் ஏற்படாததை மனதில் கொண்டு.. கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகிய இருவரின் முயற்சியால் இரு அணிகளை
சேர்ந்தவர்களையும் சந்திக்க வைத்து, கருத்து வேறுபாடுகளை கலைந்து.. முன்னணி இயக்குநர்கள் அனைவரும் எதிர் எதிராக நிற்கும் தர்மசங்கடமான நிலையை மாற்ற முன்வந்தோம்.
அதன் அடிப்படையில் பாரதிராஜாவை தலைவராகக் கொண்டும், அமீரை செலாளராக் கொண்டும் மற்ற முன்னணி இயக்குநர்களோடு தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டோம்.
இந்த ஒற்றுமை சூழல் உருவானதையும், கருத்து வேறுபாடுகளையும் கலைந்து அனைவரும் ஒன்றான நிலையையும் கண்டு.. தனிப்பட்ட முறையிலும், சங்க வளர்ச்சிக்கு இத்தனை காலம் பாடுபட்டவன் என்ற முறையிலும் நான் மிக்க சந்தோஷமடைகிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment