விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, June 10, 2011

    மின்வெட்டு குறைப்பு : ஜெ.



    சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் கூறியதாவது:-

    மக்கள் தங்களுக்கு எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் இந்த வெற்றியை பெற்று இருக்கிறோம். இதற்கு பின்னணி மக்கள் தான். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா. இந்த தேர்தலில் உண்மையான ஜனநாயகம் மலர அமோக ஆதரவு அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.

    அ.தி.மு.க. இந்த தேர்தலில் தி.மு.க. வின் படைபலம், பணபலம் போன்றவற்றையெல்லாம் வென்று அ.தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து மக்கள் இந்த ஆதரவை அளித்து இருக்கிறார்கள். இதன் மூலம் 203 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் மட்டும் 146 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த அமோக வெற்றிக்கு வழங்கிய அன்பு மக்களுக்கும், ஸ்ரீரங்கம் தொகுதியில் எனக்கு அமோக வெற்றியை வழங்கிய வாக்காளர் பெருமக்களுக்கும் இந்த மாபெரும் வெற்றியை உழைத்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், எல்லா வற்றுக்கும் மேலாக இந்த மாபெரும் வெற்றிக்கு இரவு-பகலாக உழைத்த எம்.ஜி.ஆர். ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

    தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்குவோம், விலைவாசியை கட்டுப்படுத்தவும், மின்வெட்டை போக்கவும், அயராது பாடுபடுவேன். கடந்த 5 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சியில் மக்கள் வேதனைகளையும், சோத னைகளையும் அனுபவித்தனர். மின்வெட்டு, மணல் திருட்டு, கள்ள லாட்டரி, போலி மருந்து, நில அபகரிப்பு போன்ற கொடுமைகள் நடந்தன. ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி சிக்கித் தவித்தது. இன்று சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் மக்கள் இருக்கிறார்கள். நான் பதவி ஏற்ற அன்று 7 வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றினேன்.

    இது தவிர வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சரகம் அமைக்கப்பட்டது.   இங்கு பேசிய உறுப்பினர்கள் சட்டம்-ஒழுங்கு பற்றி குறிப்பிட்டனர். கடந்த 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையால் அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாடு, அமளிக்காடானது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான தமிழ்நாடு போலீசார் தன் மானம் இழந்து, மனோதிடம் இழந்து பரிதாபமான நிலைக்கு ஆளானார்கள்.

    நான் ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலையை மாற்ற உடனடி நடவடிக்கை எடுத்தேன். காவல் துறையில் பணியில் எந்த குறுக்கீடும் இருக்க கூடாது அப்போது தான் சமூக விரோதிகளை ஒடுக்கும் முயற்சியில் காவலர்கள் சிறப்பாக பணிபுரிய முடியும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றால் காவலர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும். 

    கடந்த ஆட்சியில் பெரும்பலான காவலர்கள் அதிகாரப்பூர்வ மற்ற முறையில் வேறுபணிகளுக்கு பயன்படுத்தப்பட்டார்கள். கருணாநிதி குடும்பத்துக்கு காவல் காப்பதற்காக காலை முதல் மாலை வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கருணாநிதியின் மனைவி, துனைவி, மகள், மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என்று மொத்தம் 133 பேர் இருக்கிறார்கள் அனைவரது குடும்பத்துக்கும் அதிகாரப் பூர்வ மற்ற முறையில் காவலர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் அந்த குடும்பத்தின் சிபாரிசுப்படி தான் நியமிக்கப்பட்டார்கள் இதனால் அவர்கள் அந்த குடும்பத்துக்கு பயப்படும் நிலை ஏற்பட்டது.

    மத்திய மந்திரி அழகிரி வீட்டிலும், அவருக்கு வேண்டியவர்கள் மற்றும் அவருடன் சுற்றித்திரிபவர்களுக்காக போலீசார் காவல் பணியில் நியமிக்கப்பட்டார்கள். முக்கிய பிரமுகர்களுக்காக 5 இடங்களில் போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இது தவிர நில ஆக்கிரமிப்பு, கட்டப்பஞ்சாயத்து, ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், சமூக விரோத செயல் நிலத்தை ஒருவர் விற்றால் செல்வாக்குள்ள ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்பதை தவிர வேறு யாரும் வாங்கமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இவை அனைத்தையும் தடுத்து பாகுபாடியின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருக்கிறேன்.

    இதை கண்கூடாக நீங்களும் பார்த்து இருப்பீர்கள்.   பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைக்க விரைவில் சட்டம் கொண்டு வரப்படும். மணல் கடத்தலை தடுக்க தற்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்த 2 வாரத்தில் மட்டும் மணல் கடத்திய 897 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 810 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    மணல் கடத்திய 11 லாரிகள், 77 டிராக்டர்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணல் அள்ளும் எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் குற்றம் செய்வோரை கண்டுபிடித்து குற்றவாளிகளை தண்டித்து தமிழ்நாட்டில் காவல் துறை இழந்த பெருமையை மீண்டும் பெறுவோம். மீண்டும் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறும்.

    கடந்த 5 ஆண்டுகளாக மின் பற்றாக்குறை இருந்து வருகிறது. சென்னையில் 1 மணிநேரமும், மற்ற இடங்களில் 3 மணி நேரமும் மின்வெட்டு என்றாலும் அதை விட பல மணி நேரங்கள் மின் வெட்டு இருந்தன. தொழிற்சாலைகளுக்கு பகலில் 20 சதவீதமும், மாலையில் மற்றும் இரவில் 90 சதவீதமும் மின்வெட்டு இருந்தது. மின் வெட்டுக்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சி தான் என்றும், மின் உற்பத்தியை பெருக்க திட்டமிடவில்லை என்றும் தி.மு.க. ஆட்சியில் தவறாக கூறி வந்தனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது வடசென்னையில் 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டத்துக்கும் தூத்துக்குடியில் 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இது போல் வடுவூரில் 300 மெகாவாட் திட்டத்துக்கு 2004-லும், வடசென்னையில் மேலும் 500 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்துக்கு 2005-லும் திட்டமிடப்பட்டது.

    குண்டல் நீரேற்று மின் நிலைய திட்டத்துக்கு 2005-ல் திட்ட மிடப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்து இந்த திட்டங்களை செயல்படுத்தி இருந்தால் மின்சார தட்டுப்பாடு வந்து இருக்காது. மத்திய அரசு 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மிகப் பெரிய 2 திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்தது. தி.மு.க. அரசு அதிலும் கால தாமதம் செய்ததால் ஒரு திட்டத்துக்கு மட்டுமே ஒப்புதல் பெற முடிந்தது. அதுவும் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு பிறகே ஒப்புதல் பெற்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தூத்துக்குடி, மேட்டூர், எண்ணூர் போன்ற திட்டங்களால் 2500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 206 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து அதிகவிலை கொடுத்து மின்சாரம் வாங்கினார்கள். தி.மு.க. அரசு மின்சார நிலையங்களை முறையாக பராமரிக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அடுத்த மாதத்தில் இருந்து 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும். படிப்படியாக மின் வெட்டே இல்லாத மாநில மாக தமிழகம் மாறும். எனது அரசு 10 ஆயிரம் மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டங்களை நிறை வேற்றும்.


    Posted by விழியே பேசு... at 6:26 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ▼  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ▼  June (616)
      • பிரான்ஸ் அதிபர் சார்கோசி தாக்கப்பட்டார்
      • இலங்கையில் கொடூர சித்திரவதை-தாயகம் திரும்பிய மீனவர...
      • தமிழர்களை ஏமாற்றாதீர்கள் மன்மோகன்-நெடுமாறன் எச்சரி...
      • பொன்சேகாவுடனான மோதலுக்கு 'ரா' தான் காரணம்- ராஜபக்சே
      • ராஜபட்சேவுக்கு எதிராக சீமான் தேர்தலில் போட்டியிடலா...
      • உதயன் நாயகி விஜய்யுடன் இணைகிறாராம்!
      • வேங்கையை வாங்கிய திமுக விவிஐபி
      • ராணாவில் வடிவேலு இருக்காரா? கே.எஸ்.ரவிகுமார் பதில்
      • விஜய்யிடம் விசேஷ மாற்றம்?
      • விரைவில் 'சுகோயில்' பறக்கவிருக்கும் சச்சின், டோணி
      • அரசியல்வாதிகளெல்லாம் வெளியே போங்கப்பா- ஐசிசி அதிரடி!
      • ஸாரி, இன்னிக்கு ரீசார்ஜ் கிடையாது!
      • உப்பு என்ற போர்வையில் 10,000 கிலோ வெடிபொருள் கடத்தல்!
      • 2ஜி ஊழல்-அப்ரூவராவாரா கனிமொழி?
      • பிரதமரை சந்தி்த்தார் தயாநிதி மாறன்: பதவியை ராஜினாம...
      • சீனாவின் ஒப்பிடுகையில் நாம் சுண்டைக்காய்- மன்மோகன்
      • ''அஜீத் பற்றி ரகசியம் சொல்லவா?''
      • திரைப்படங்களை மிஞ்சிய காதல், சென்டிமென்ட்,ஆக்ஸன் க...
      • திருமண 'பாண்டில்' இணைந்த ஜேம்ஸ் பாண்ட்!
      • நடிகை அனுஷ்கா சர்மாவிடம் சுங்க அதிகாரிகள் அதிரடி வ...
      • இளைஞர்களை குடிக்கச் சொன்னேனா?-ஸ்ரேயா
      • ரஜினியின் 'அழைப்புகள்'!!
      • மொட்டை மாடியில் தேன்நிலவு! - செல்வராகவன்
      • பாலாவுக்கு இஸ்லாமியர்கள் கண்டனம்!
      • சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
      • மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வீடியோ ஆதாரங்களுட...
      • மகனை நினைத்து கதறி அழும் கனிமொழி!
      • மத்திய அமைச்சரவையில் எங்களுக்கு இடம் தந்தது தப்பு!...
      • காங்கிரஸுக்குக் கொடுத்த ஆதரவு முடிந்து விட்டது -ஜெ...
      •  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சமச்சீ...
      • பிரபாகரனுடன் சேர்ந்து இலங்கைக்கு துரோகம் செய்தார் ...
      • 'சண்டை' போடாதீங்க-ரஜினிக்கு டாக்டர்கள் அட்வைஸ்!
      • தர்மஸ்தலாவில் சாமி முன்பு சத்தியம் செய்தார் குமாரச...
      • அப்துல்கலாம் கொடுத்த புத்தகம் : நடிகர் விவேக்
      • இலங்கை தமிழர்களுக்காக பதவியை துறந்தேன் : டி.ராஜேந்தர்
      • இந்திய அரசு எனக்கு விருது தர வேண்டும் : நாஞ்சில் ச...
      • விஜய் பட தயாரிப்பாளர் கைது
      • ராஜபக்சே கொல்லப்பட வேண்டும்- மதிமுக மாநாட்டில் தீர...
      • மசோதாக்களை உருவாக்குவதில் இனி மக்கள் பிரதிநிதிகளுக...
      • ரஜினியை காப்பி அடிக்கவில்லை- நஸ்ருதீன் ஷா
      • ஹர்ஷிகாவின் இரு கண்கள்!
      • இஃபா விழாவில் ரஜினியின் ரோபோட்டுக்கு 3 விருதுகள்
      • கருணாநிதி அரசு செய்த தவறுகளும், அதிமுக அரசு கற்க வ...
      • 'அதப் பத்தி எழுதாதே': நிருபர்களுக்கு ஆசின் டோஸ்!
      • அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்...
      • ஸ்டாலினுக்கு வயதாகி விட்டது, தமிழகத்தின் அடுத்த மு...
      • சாய்பாபா ஆசிரமத்தில் கொள்ளை புட்டபர்த்தி மக்கள் போ...
      • வெளியூர்களில் 1-ந்தேதி முதல் மின்வெட்டு 3 மணியில் ...
      • வாஸ்துவாவது, மாற்றமாவது... ரஜினி வீட்டு செய்தியில்...
      • ஜெயலலிதாவுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
      • பிரபுதேவாவைச் சந்திக்காமல் விரதமிருந்த நயன்தாரா!
      • காவல் நிலையத்தில் 'கலாட்டா' செய்த தேமுதிக எம்எல்ஏ:...
      • சீமானுக்கு ஆப்ப்பு : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வ...
      • தனுஷின் புதிய அவதாரம்!
      • ஏழைகளுக்கு ஆடு, மாடு கொடுக்கும் திட்டம்: ஜெ., ஆலோசனை
      • இலங்கை அரசை கட்டாயப்படுத்துங்கள்: இந்தியாவுக்கு சர...
      • முதல்- அமைச்சரின் காரை நிறுத்தி வாழ்த்து கூறிய மாண...
      • நடிகர் தனுஷ் நடித்த வேங்கை படத்துக்கு இடைக்கால தடை
      • சிம்புவை இந்தியில் அறிமுகப்படுத்த துடிக்கும் கெளதம்
      • வரிச்சலுகை உண்டா இல்லையா?
      • ''புதிய அலைகள்'' அணியின் வெற்றி!
      • ரஜினி நலம்... ரசிகைகள் நேர்த்திகடன்
      • ஒசாமாவின் கடைசி கடிதம் !
      • முன்னாள் காதலி ஐஸ்வர்யாராய்க்கு வாழ்த்து சொன்ன சல்...
      • தொடரும் விஜயகாந்தின் ரௌடிசம் : மகனுக்கு சீட் மறுப...
      • பின்லேடனின் செல்போன்கள் மூலம் பின்லேடன்- ஐஎஸ்ஐ தொட...
      • வாலியுடன் விஜயகாந்த் சந்திப்பு அரசியல் ஆலோசனைகளா?
      • மகனுக்கு வீடு வாங்க கடன் வாங்கிய சச்சின்!
      • சென்னை திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!
      • மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக மதுரை திரும்பிய அழ...
      • ரஜினி வழியில் விஜய்!
      • கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா!
      • பாடல் ஆசிரியரான லாரன்ஸ்!
      • ரஜினிகாந்த் வீடு வாஸ்து சாஸ்திரப்படி புதுப்பிக்கப்...
      • 12ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம்
      • பறக்கும் படை : நடிகர் விவேக் அதிரடி
      • 'மங்காத்தா' ரிலீஸ் தியதி !
      • விஜய்யை அடுத்து இயக்குவது யார்? : விஜய் பதில்
      • வெற்றி ‌தோல்வி என்னை பாதிக்காது: ஹாரிஸ் ஜெயராஜ்!
      • செங்கடல்: கட் இல்லாமல் அப்படியே அனுமதித்த ட்ரிப்யூ...
      • அஜித்தின் புதிய அவதாரம் பில்லா
      • போதையில் பெண்களிடம் எஸ்ஐ சில்மிஷம்-தப்பவிட்ட போலீசார்
      • பாலா படத்தில் நடிக்க ஆசை: சோனியா அகர்வால்!
      • கிருஷ்ண லீலை தாமதம்! கண்ணீர் வடிக்கும் டைரக்டர்!!
      • ஹன்சிகாவின் தொழில் பக்தி!
      • கமலுடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் மற்றொரு பாலிவுட் நட...
      • அஜீத் முத்தம் தர மறுக்க நான் என்ன பேயா பிசாசா? - த...
      • ஜூலை 15ல் பிரசாந்தின் மம்பட்டியான்!
      • ஜாகீர் கானுடன் என்ன உறவு...? இஷா சர்வானி விளக்கம்!
      • அமலா பால்க்கு அக்காவான சமீரா!
      • நடிகர் கார்த்தி திருமணம்! கோவையில் 3ம்தேதி நடக்கிற...
      • மீனவர்களுடன் இணைந்து போராட்டம்- சீமான்.
      • இராமாயண வாலியா ரஜினி?
      • அது ரஜினி எழுதிய கடிதமா? சந்தேகம் கிளப்பும் பிரமுக...
      • மனிதனாக இரு சல்மான்கான்
      • அவன் இவன்.... வசூலில் சாதனை!
      • கண்ணாடியை கழற்றிவிட்டு கண்ணீர் விட்ட கருணாநிதி
      • கோவிலில் சத்தியம் செய்யும் விவகாரம்: எடியூரப்பா பி...
      • 'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன...
      • சொத்துகள் பறிபோனால் என் செய்வது : சிறையில் மெழுகுவ...
      • ஆபாசமாத்தான் வருவேன்... ஆனா போட்டோ எடுக்கக் கூடாது...
      • இது தாண்டா ரஜினி ! ராணாவில் மீண்டும் வடிவேலுவுக்கு...
      • போர்க்குற்ற அறிக்கை: ஐநாவுக்கு இலங்கை அளித்த ரகசிய...
      • 3 மாதத்தில் அரசு கேபிள் டிவி: ஜெ திட்டம்!!
      • கருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ஜெயலலிதா
      • நடிகர் வடிவேல் மீண்டும் அடிவாங்கியுள்ளார்: மா.கம்யூ.
      • காதலிக்கு 60 வயது: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி த...
      • காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவு எப்படி ...
      • பொதுமக்களுக்கு அவஸ்தையை கொடுத்த விஜய் பிறந்தநாள் (...
      • விஜய்யைப் பற்றிய சில தகவல் துளிகள்
      • கனிமொழிக்கு தனி அறை!
      • பாடலாசிரியர் ஆனார் தனுஷ்
      • ராணாவில்தீபிகா படுகோனேவுடன் டூப் ரஜினி ? வெளிவரும...
      • ரஜினியின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள் ர...
      • பஞ்சு-70: ரஜினி, கமல் வாழ்த்து!
      • சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...
      • பிரபாகரன் மனைவி, மகள் உயிருடன் இருக்கிறார்கள் : இல...
      • லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்-த...
      • ஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்
      • 'இத யார் கிட்ட போய் சொல்லுறது' ; எடியூரப்பா -குமா...
      • படுக்கை அறை காட்சியை படம் பிடித்தவர்கள் கைது
      • கதாநாயகன் ஆகும் சிவாஜிகணேசனின் பேரன்
      • என்னா பெரிய பொய்யி.... ஜெ ரூ.9 லட்சம், கருணாநிதி ர...
      • மலேசியாவில் எம்ஜிஆர் சிலை: திறந்து வைக்கிறார் சத்ய...
      • அமிதாப் உடல்நிலை திடீர் பாதிப்பு!
      • ரஜினியை சிங்கப்பூரில் சந்தித்து நலம் விசாரித்த பிர...
      • கமல் படம்: கதக் ஆட வராததால் ஸ்ரேயாவுக்கு கல்தா?
      • ரகசிய கேமராக்கள்-மைக்ரோபோன்கள்: உளவு பார்க்கப்பட்ட...
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.