Thursday, December 29, 2011

96 மொழிகளில் ' காதல்' : சிம்புவின் Love Anthem (வீடியோ)

பாடல்நடனம்நடிப்புஇயக்கம் என திரைத்துறையில் பல தளங்களில் இயக்கும் சிம்புஅடுத்தது உலக அமைதிக்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அன்புக்கான பாடலாகஉலகத்தின் Love Anthem- ஆக அது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அப்பாடலின் முன்னோட்டம் சில நொடிகள் வெளியான போதே சிம்பு ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது.  பல்வேறு தரப்பு ரசிகர்களும் சிம்புவின் ஃபேஸ்புக் இணையத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

" 96 மொழிகளையும் பல கோடி மக்களையும் இணைக்கதடைகளை உடைத்துஅனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு " என்று சிம்பு சொல்லி இருந்தார்.  சிம்பு எழுதி பாடிய பாடலின் வீடியோ பதிவை நேற்று காலை சோனி நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

96 மொழிகளில் காதல்என்று பொருள்படும் வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறாராம் சிம்பு.

இளைஞர்கள் மத்தியில் தற்போது அந்த பாடல் பிரபலமாகி வருகிறது. DASHURI என்று துவங்குகிறது அந்த பாடல். அப்பாடல் இடையில் வரும் ALL WE NEED IS.... PYAAR PREMA KADHAL... என்ற வரிகளை தான்  இளைஞர்கள் முணுமுணுக்க துவங்கி இருக்கிறார்கள்.

அப்பாடலின் வீடியோ பதிவு இதோ:






1 comment:

  1. அருமையான பகிர்வு சிம்புவின் இந்த வளர்ச்சி
    பிரமிக்கத் தக்க விடயமாக உள்ளது .வாழ்த்துக்கள் .
    மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete