Tuesday, March 27, 2012

ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வெளியுறவு மந்திரி அறிவிப்பு


கொழும்பு நகரில் நேற்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை குழு தீர்மானத்துக்கு கட்டுப்படுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதனால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

இந்த தீர்மானம் இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதாக நாங்கள் கருதுகிறோம். மேலும் இந்த தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க முடியாது.

இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் அல்ல.

இவ்வாறு பீரீஸ் தெரிவித்தார்.


No comments:

Post a Comment