விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Sunday, July 1, 2012

    ஜனாதிபதி தேர்தலில் மம்தா பானர்ஜியும் என்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன்: பிரணாப் முகர்ஜி பேட்டி


    ஜனாதிபதி தேர்தலில் மம்தா பானர்ஜியும் என்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
     
    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வருகையையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
     
    சத்தியமூர்த்தி பவன் வண்ண மலர்களாலும், கொடி தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நுழைவுவாயிலில் இருந்த காந்தி, காமராஜர் படத்திற்கு ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. பிரணாப் முகர்ஜியை வரவேற்பதற்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னதாகவே வந்து குவிந்திருந்தனர்.
     
    பிரணாப் முகர்ஜி நேற்றிரவு 7.35 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வந்தார். அப்போது அதிர்வேட்டுகள் வெடித்தும், மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் பிரணாப் முகர்ஜிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், குலாம் நபி ஆசாத், நாராயணசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
     
    பின்னர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
     
    ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள எனக்கு ஏற்கனவே பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகள் மட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
     
    குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவைதவிர மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
     
    ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் அந்த நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்தை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், நாட்டின் நிர்வாக ரீதியான திட்டங்களை தீட்டுவது, கொள்கைகளை வகுப்பது ஆகியவை ஜனாதிபதியின் அதிகார வரம்பிற்குள் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பலம்.
     
    இந்தியாவில் சாதி, மதம், மொழி, இனம், கட்சிகள் என்று பன்முகத்தன்மை இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது. அந்த அடிப்படை தத்துவத்தை பிரதிபலிப்பவராக ஜனாதிபதி இருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் வலிமை, இத்தனை வேறுபாடுகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையில்தான் அடங்கியிருக்கிறது. அதுதான் இந்திய ஜனநாயகத்தின் தனித்தன்மை ஆகும். எல்லோரும் பெருமைப்படும் விஷயமும் இதுதான்.
     
    இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
     
    அதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரணாப் முகர்ஜி அளித்த பதில்களும் வருமாறு:-
     
    கேள்வி: நீங்கள் ஜனாதிபதியாக வந்த பிறகு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்? ராஜீவ்காந்தி கொலையாளிகள் கருணை மனு பற்றி முடிவு எடுக்கப்படுமா?
     
    பதில்: இந்திய ஜனாதிபதிக்கு என்னென்ன அதிகாரம் இருக்கிறது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 53-ல் இருந்து பல்வேறு ஷரத்துகளில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக இருப்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதை, முன்னாள் ஜனாதிபதிகள் ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் மற்றும் அவர்களைத் தொடர்ந்து இருந்த ஜனாதிபதிகள் பல்வேறு விஷயங்களை கையாண்ட விதத்தில் முன்உதாரணங்கள் இருக்கின்றன. அவர்களது வழிகாட்டுதலின்படி நான் செயல்படுவேன்.எனவே, எனக்கென்று ஒரு புதிய இலக்கை வகுத்துக் கொள்ளத் தேவையில்லை.
     
    கேள்வி: தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்களே? அவர்களிடம் ஆதரவு கோருவீர்களா?
     
    பதில்: அவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான என்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். திரிணாமூல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்காள முதல்-அமைச்சருமான மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவரும் என்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன்.
     
    இவ்வாறு பிரணாப் முகர்ஜி பதில் அளித்தார்.
     
    பேட்டிக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் உள்ள அரங்கத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பிரணாப் முகர்ஜி பேசினார். இதில், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


    Posted by விழியே பேசு... at 9:37 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ▼  July (426)
      • கோஹ்லி 128, ரெய்னா 58 விளாசல் தொடரை வென்றது இந்தியா
      • கணவனை வெட்டி கொலை செய்து புதைத்த இடத்தை சமையல் கூட...
      • கதாநாயகனாகும் கனவு நிறைவேறியது: இசையமைப்பாளர் விஜய...
      • அசாமில் ராணுவ வாகனம் குண்டு வைத்து தகர்ப்பு: ராணுவ...
      • பிரசன்னா மனைவியாக இருக்கப் பிடிக்கவில்லை! - சினேகா
      • பாதி இந்தியாவில் கரண்ட் இல்லை.. இருளில் மூழ்கின வட...
      • ஜேம்ஸ் பாண்டுடன் பாராசூட்டில் இருந்து குதித்த 'ராண...
      • மீண்டும் நிதி அமைச்சராகிறார் ப.சிதம்பரம்- உள்துறை ...
      • ரஜினியின் 'கோச்சடையான்' காமிக்ஸ் புத்தகமாக வெளிவரு...
      • இந்திய ரயில்வேக்கு இப்படி ஒரு கேவலம் கெட்ட அமைச்சர...
      • இளம்பெணை ராகுல் காந்தி கடத்திச் சென்று கற்பழித்தது...
      • பில்லா 2 ஐத் தூக்கிவிட்டு நான் ஈ - பாக்ஸ் ஆபீஸில் ...
      • மதுரையில் மயக்க ஊசி போட்டு மாணவியை கற்பழிக்க முயன்...
      • தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த ஜெயல...
      • யம்ம்ம்மா.... 'மாற்றான்' ! வாய் பிளக்கும் கோடாம்பா...
      • இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா?
      • அஜீத்தோடு ராணா!
      • தமிழகத்து எதிர்ப்புகளைப் பற்றி எந்த கவலையும் இல்லை...
      • பிரபுதேவா படத்தில் நடிக்கிறேன் - ஸ்ருதிஹாசன்
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் "பயங்கர சப்தத்துடன் வ...
      • 20 வருடங்களுக்கு பிறகு அமலா மீண்டும் நடிக்கிறார்
      • ஆட்சியே கவிழ்ந்துவிடும்...:அன்னா ஹசாரே எச்சரிக்கை
      • செயல்திறனில் புலியைப்போன்றவர்: நரேந்திரமோடிக்கு கா...
      • லண்டன் ஒலிம்பிக் பேட்மிண்டன்: சாய்னா நேவால் வெற்றி
      • லண்டன் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு முதல் பதக்கம்...
      • ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் ப...
      • சாட்டையை சுழற்றிய ஜெயலலிதா- கவுன்சிலர்களின் பதவி ப...
      • 50 வது படத்தை இயக்கிகுறார் மணிவண்ணன் - தலைப்பு: அம...
      • நெல்லையை சேர்ந்த 5 பேர் பலியா?: தகவல் கிடைக்காததால...
      • தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பி...
      • அடுத்த மாதம் 2 பவுர்ணமிகள்: 2-வது பவுர்ணமி நீல நிற...
      • கொலைகார போலீசைக் கண்டித்து நல்லகண்ணு, வைகோ உண்ணாவி...
      • நித்யானந்தாவை மிரட்டிய வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்...
      • தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் காயமடைந்தோர் ...
      • ரெயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினோம்: தீ...
      • மோடியை புகழ்ந்து தள்ளிய ராம்தேவ்: கடுப்பில் அன்னா ...
      • என்னை எதிர்க்கட்சி தலைவராக மதிக்கவில்லை: விஜயகாந்த...
      • கோவில் நகைகளை திருடிய அதிமுக நிர்வாகி கைது
      • சிரியாவில் ராணுவத்துடன் போரிட ஆயுதம் கொடுங்கள்: உல...
      • ஒலிம்பிக் போட்டியின் இடைவெளி நேரங்களில் நடனமாடி கல...
      • அரக்கோணம் அருகே கர்ப்பிணி பெண்ணை கடத்தி 2-வது திரு...
      • லட்சக்கணக்கான பயணிகளை பீதிக்குள்ளாக்கும் இந்தியாவி...
      • வறுமை காரணமாக ஆந்திராவில் 2 வயது குழந்தை ரூ.22 ஆயி...
      • ரெயில் தீ விபத்து: உடல்கள் கருகியதால் அடையாளம் தெர...
      • பாக். எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆக்சிஜன் கு...
      • நாளை 4-வது ஆட்டம்: இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?
      • ரயில் விபத்து: நெல்லூர் விரையும் ஆந்திர முதல்வர்- ...
      • டெல்லியில் இருந்து சென்னை வந்த ரெயிலில் தீ விபத்து...
      • ஊழல் இல்லாத மாநிலம் குஜராத்: நரேந்திரமோடிக்கு பாபா...
      • திருமுல்லைவாயலில் இன்று பள்ளி வாகனத்தில் சிக்கி 1 ...
      • 34 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை பிரிந்த பெண் பே...
      • பிரேமலதாவின் சொந்தக்காரப் பெண் மூலம் தேமுதிகவை உடை...
      • லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா...
      • துடுப்பு படகு: ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் சவ...
      • அன்னா ஹசாரே உண்ணாவிரதம்: டெல்லியில் ஆதரவாளர்கள் கு...
      • பிரபாகரனின் தாயை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காத கருண...
      • இலங்கையுடன் நட்பாக இருக்கவே மத்திய அரசு விரும்புகி...
      • இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர் ...
      • சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கா...
      • பழைய நடிகை ஸ்ரீதேவியுடன் இணையும் அஜீத்!
      • ஒலிம்பிக் தொடக்க விழா துளிகள்
      • சோனியா அகர்வாலிடம் செம அடி வாங்கிய நடிகர் சூர்யாவி...
      • ஒலிம்பிக் அணிவகுப்பில் இந்திய அணியுடன் வந்த மர்ம ப...
      • தனுஷ் பிறந்தநாள் தண்ணி பார்ட்டி! ஐஸ்வர்யா மிஸ்ஸிங் !!
      • மாற்றான் இசை வெளியீடு
      • ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்
      • படுசொதப்பலாகிவிட்ட அன்னா ஹசாரே குழு உண்ணாவிரதம்.. ...
      • அடுத்தடுத்து 3 குழந்தைகள் பலி: பள்ளி குழந்தைகளை கா...
      • தேர்தலில் நான் போட்டியிடவும் இல்லை- தனி கட்சி தொடங...
      • துப்பாக்கி சூடு: பெண்கள் 10மீ. ஏர் ரைபிள் பிரிவில்...
      • 45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர் சூசக தகவல்
      • இந்திய வீரர்கள் களம் இறங்கும் போட்டிகளும்,போட்டி த...
      • ஒலிம்பிக் போட்டியில் தமிழக இளைஞர்களின் கலைநிகழ்ச்சி
      • ஸ்ரீகாந்த் படத்துக்காக சிம்பு பாடும் குத்துப்பாட்டு
      • ‘நான் ஈ’ இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்
      • என்.டி.திவாரிதான் ரோகித் சேகரின் தந்தை: மரபணு சோதன...
      • 18 ஒலிம்பிக் பதக்கங்களை அள்ளி சென்ற லரிசாவின் சாதன...
      • திவாரியின் மனு தள்ளுபடி: மரபணு சோதனை அறிக்கையை கோர...
      • கூட்டம் வராததால் டென்ஷன்... பத்திரிக்கையாளர்ளை தாக...
      • ஏர்செல் விவகாரம்: தயாநிதி மாறனிடம் மீண்டும் விசாரணை
      • உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ...
      • ஒலிம்பிக் பதக்கங்களின் சிறப்பம்சம்
      • ரஞ்சிதா வழியில் நித்தியானந்தாவின் சிஷ்யையான நடிகை ...
      • வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மானியத்துடன...
      • ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்தியருக்கு 5 கிலோ ...
      • மான் வேட்டையாடிய வழக்கு: சல்மான்கானுக்கு ஜெயில்?
      • ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?
      • மதுரையில் பள்ளிக்கூட பெஞ்சை விற்று மது குடித்த மாண...
      • ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு! - ரஜினி பற்றி கமல்
      • லண்டன் ஒலிம்பிக்: 6 இந்திய வீரர்-வீராங்கனைகள் பங்க...
      • பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்கிற...
      • நோ நோ சொன்ன சோனா!
      • ஆடி வந்தால் ஈ இருக்கும் ‘மேயர் பேசுகிற பேச்சா இது...’
      • பிரணாப் முகர்ஜியின் முதல் நாள் பணிகள்
      • சீன அகராதியில் காம்ரேட் வார்த்தை நீக்கம்
      • விரைவில் ஃபேஸ் புக்கில் பிரணாப்
      • லண்டன் ஒலிம்பிக் போட்டி காண செல்லும் இந்திய பிரபலங...
      • மாயாவதி சிலை சேதம் எதிரொலி: உ.பி. முழுவதும் போலீஸ்...
      • தனுஷ் + அமலா + சற்குணம் !
      • விரைவில் வெளியாகிறது பாலாவின் 'பரதேசி'
      • நான் இல்லை! : உதயநிதி
      • சுரண்டை காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் குத்திக்...
      • மறக்கப்பட்ட நாயகி : லட்சுமி சாகல்
      • 'கும்கி' பட போட்டோக்கள் (stills)
      • ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?- நீதிபதிகள...
      • மகள் விபத்தில் சிக்கியதை அறிந்தும் ஆட்டோவில் குழந்...
      • ஈஞ்சம்பாக்கத்தில் தவறான ஊசி போட்டதால் இளம் பெண் சா...
      • திருடிய நகைகளை 'சாரி லெட்டருடன்' வாசலில் வைத்துவிட...
      • 'தில்லு முல்லு' படத்தை ரீமேக் செய்ய எதிர்ப்பு
      • அன்னா ஹசாரே குழுவின் போராட்டத்தில் கூட்டம் இல்லை...
      • திருட்டு சி.டி. பற்றி தகவல் கொடுப்போரின் குழந்தைகள...
      • அறிவிப்பு வெளியிட்டு மாயாவதி சிலையின் தலை, கைகள் த...
      • ஏற்கனவே ஒரு முறை தவறி விழுப்பார்த்தாள்: பெற்றோர் எ...
      • புதிய தலைமை செயலக வழக்கு: நீதிபதிகள் விசாரிக்க மறு...
      • மத வன்முறையில் என் மேல தப்பிருந்தா தூக்கிலிடுங்க.....
      • ஒரு கடன்காரனைப் போல கூச்சத்தோடு ஒதுங்கிப் போகிறேன்...
      • சேதம் அடைந்த எலும்பை மீண்டும் உருவாக்கலாம்: ஆய்வாள...
      • செல்வராகவன் இயக்கும் ''பொன்னியின் செல்வன்''?
      • ஒலிம்பிக் தொடக்க விழாவில் ராஜபக்ச: வரிந்து கட்டிஎத...
      • பள்ளிக்கு செல்போன் கொண்டு வர தடை: மாணவர்களுக்கு எச...
      • தமிழ் சினிமாவில் முதன்முறையாக 'ஆதிபகவன்'னில்!!!
      • சவூதி அரேபியாவில் நர்ஷ் வேலை ரெடி !
      • இலங்கையில் அணுமின் நிலையம் அமைக்க கை கொடுக்கிறதாம்...
      • ஒலிம்பிக்: பெண்கள் கால்பந்து போட்டியில் இங்கிலாந்த...
      • த்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த ’மாஸ்டர்’ பிளான்!
      • பிரணாப் முகர்ஜிக்கு எதிரான சங்மா நடவடிக்கைக்கு எங்...
      • அஜித் ஜிம் ஆசைக்கு காரணம்!
      • ' நான் ஈ' ராஜமௌலியின் அடுத்த வெற்றிப்படம்!
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.