Thursday, July 26, 2012

ஏற்கனவே ஒரு முறை தவறி விழுப்பார்த்தாள்: பெற்றோர் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத டிரைவர்

மாணவி ஸ்ருதியின் உயிரைப் பலி வாங்கிய பஸ் ஓட்டை உடைசலாகவே இருந்துள்ளது. அந்த ஓட்டையில் கடந்த வாரம் ஸ்ருதி தவறி விழப்பார்த்தாள். இதுபற்றி பெற்றோரிடம் அவள் முறையிட்டாள். இதனால் பதறிப்போன தந்தை மாதவன், டிரைவர் சீமானை அழைத்து எச்சரித்துள்ளார். 

அதன் பிறகுதான் அந்த ஓட்டையை பலகை போட்டு அடைந்துள்ளனர். இந்த பலகை உடைந்துதான் ஓட்டை வழியாக ஸ்ருதி கீழே விழுந்து உயிரிழந்தாள். 

விபத்து நடந்த இடத்தில் இருந்து சில தூரத்தில்தான் ஸ்ருதி இறங்கும் இடம் உள்ளது. இதற்காக ஸ்கூல் பேக்குடன் தயாரானது போதுதான் அவள் கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment