Thursday, July 26, 2012

புதிய தலைமை செயலக வழக்கு: நீதிபதிகள் விசாரிக்க மறுப்பு

புதிய தலைமை செயலக கட்டிடத்ததை அதிநவீன மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து வக்கீல் வீரமணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்றை தொடர்ந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. கடந்த 18-ந்தேதி இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மேலும் விசாரணைக்காக என்று குறிப்பிடப்பட்டு பட்டியலிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி முருகேசன் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க விரும்பவில்லை என்றார். 

இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




No comments:

Post a Comment