பாலா இயக்கிய பிதாமகன் படம் மூலம் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். சுராஜ், சமுத்திரக்கனி, மதுரவன், சசிக்குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார்.
கஞ்சா கருப்பு கூறியதாவது:-
எந்த கேரக்டர் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும். முன்னணி காமெடியர்களுடன் நடித்த துணை காமெடி நடிகர்கள், பட வாய்ப்புகள் இன்று வறுமையில் தவிக்கின்றனர். அவர்களுக்கு நான் வாய்ப்புகள் வாங்கி கொடுக்கிறேன்.
இந்தி, தெலுங்கில் நிறைய காமெடியர்கள் உள்ளனர். தமிழ் படங்களில் குறைவு. எனவே புதிய காமெடி நடிகர்களை இயக்குனர்கள் உருவாக்க வேண்டும். திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் அனாதை குழந்தைகளை பாதுகாக்கும் சாந்திவனம் என்ற அமைப்பிற்கு நிதி திரட்டி கொடுத்துள்ளேன். அங்கு வளரும் 13 ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்துள்ளேன். சிவகங்கை அருகே ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஒன்றையும் கட்டி வருகிறேன்.

No comments:
Post a Comment