டெல்லி அருகே 10 பேர் கொண்ட நண்பர்கள் கும்பல் ஒன்றுசேர்ந்து, இளம்பெண் ஒருவரை சீரழித்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இதில் ஒருவர் போலீசில் சிக்கிவிட்டார். 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.டெல்லி பாதர்பூரை சேர்ந்தவர் ஷீலா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெல்லி குடிநீர் வாரியத்தில் வேலை பார்க்கிறார். ஷீலாவின் நண்பர் இந்திரஜித். நேற்று முன்திம் இரவு ஷீலாவுக்கு போன் செய்த இந்திரஜித், ‘எனக்கும் எனது காதலிக்கும் இடையே சிறிய பிரச்னை. அவளிடம் சமாதானம் பேச உன்னுடைய உதவி தேவை. ப்ளீஸ், நான் செல்லும் இடத்துக்கு வா’ என்று அழைத்திருக்கிறார்.
நட்பு அடிப்படையில் அழைப்பதாக நினைத்து, இரவென்றும் பாராமல், இந்திரஜித் சொன்ன இடத்துக்கு சென்றார் ஷீலா. அங்கு ஒரு காரில், தனது நண்பர்கள் 3 பேருடன் காத்திருந்தார் இந்திரஜித். கும்பலைப் பார்த்ததும் ஷீலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வந்த வழியே திரும்ப முயன்றார். ஆனால், அதற்குள் இந்திரஜித் கும்பல், ஷீலாவின் கையைப் பிடித்து இழுத்தது. குண்டுகட்டாக தூக்கி, ஷீலாவை காருக்குள் அடைத்தது. டெல்லி & ஆக்ரா நெடுஞ்சாலையில் கார் பறந்தது. ஓடும் காரிலேயே வாலிபர்கள் ஷீலாவை சீரழிக்க தொடங்கினர். இதற்கிடையில், தனது நண்பர்கள் சிலருக்கு போன் செய்து வரவழைத்தார் இந்திரஜித். அவர்களும் காரை பின்தொடர்ந்து வந்தனர்.
பல்லாப்கர் என்ற இடம் அருகே காரை நிறுத்திய வாலிபர்கள் வயல்வெளிக்கு ஷீலாவை தூக்கி சென்று அங்கும் தங்கள் அத்துமீறல்களை தொடர்ந்தனர். நண்பர்கள் போர்வையில் ஒன்று சேர்ந்த அந்த வெறிக் கும்பலை சமாளிக்க முடியாமல் ஷீலா மயங்கினார். நள்ளிரவு வரை ஷீலாவை மாறிமாறி சீரழித்த அந்த கும்பல், அவரை அங்கிருந்த பாலம் அருகே தூக்கிப் போட்டுவிட்டு சென்றது.
மயக்கம் லேசாக தெளிந்த நிலையில், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஷீலா தகவல் கொடுத்தார். போலீஸ் டீம் விரைந்து வந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஷீலாவை அட்மிட் செய்தனர். ஷீலா கொடுத்த புகாரில், இந்திரஜித் உள்பட 10 வாலிபர்கள் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment