இலங்கையின் கிழக்கு கடல் எல்லையில் 37 சீனா மீனவர்கள் ஞாயிறு இரவு இரண்டு மீன்பிடி படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சீன மீனவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற சீனா கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.
இலங்கைக்கு பல வழிகளில் உதவி வரும் சீனா, கிழக்கு கடற்கரை பகுதியில் இலங்கை அரசு துறைமுகம் அமைக்க மிகப்பெருமளவில் பொருளுதவி அளித்து வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக இலங்கையுடன் சீனா நட்பு பாராட்டி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
சீனாவுடன் வர்த்தக ரீதியாகத்தான் உறவு வைத்திருக்குறோமே ஒழிய வேறு உள்நோக்கம் ஏதுமில்லை என்று இலங்கை இதை மறுத்து வருகிறது.

No comments:
Post a Comment