தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்து தேர்வு நடந்தது. ஈரோடு, தர்மபுரி ஆகிய பகுதிகளில் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடலூரிலும் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று 49 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 52 பேர் தேர்வு எழுதினார்கள்.
கடலூர் புனித வளனார் கல்லூரி தேர்வு மையத்தில், நெல்லிக் குப்பம் வாழப்பட்டு கம்பன் நகரை சேர்ந்த ராஜாக்கண்ணு என்பவர் தேர்வு எழுதினார். தேர்வு எழுதி முடிந்ததும் வெளியே வந்த அவர் கலெக்டர் அலுவலகம் எதிரே மஞ்சக்குப்பம் மைதானத்தின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள் போன்று கையால் எழுதப்பட்ட 15 பக்கங்கள் கொண்ட ஜெராக்ஸ் நகல் கிடந்ததை பார்த்து எடுத்தார். அதில் அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்கள் சரியாக குறிப்பிட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜாகண்ணு கூறியதாவது:-
எம்.காம்.பட்டதாரியான நான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 2-வது முறையாக எழுதுகிறேன். மஞ்சக்குப்பம் மைதானத்தில் விடைகள் அடங்கிய விணாத்தாளை கண்டெடுத்தேன். இதை வைத்து தேர்வு எழுதியவர்கள் எளிதில் தேர்ச்சி பெற்று வேலைக்கு சென்று விடுவார்கள். ஆனால் என்னைபோன்று கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போய் விடும்.
இதுபோன்ற முறைகேடு நடந்துள்ள இந்த தேர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் நான் தேர்வினை எழுதப்போவ தில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூரில் கேள்வித்தாள் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கலெக்டர் ராஜேந்திரரத்னூவிடம் கேட்டபோது தேர்வு முடிந்து பல மணி நேரங்கள் ஆனபின்னர் கையால் எழுதப்பட்ட ஜெராக்ஸ் நகல் கிடைத்துள்ளது. அதைவைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றார்.

No comments:
Post a Comment