தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'ஜெயலலிதா மற்றும் சசிகலா, தங்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை மிகவும் தாமதப்படுத்தி வருகிறார்கள். எனவே வழக்கை உச்சநீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் சதாசிவன் மற்றும் ரஞ்சன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சசிகலா மற்றும் தமிழக அரசு இது தொடர்பாக மூன்று வாரத்தில் விளக்கம் அளிக்கவேண்டும். மேலும் அவகாசம் அளிக்க முடியாது என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment