ஊழலுக்கு எதிரான அன்னா குழு கலைக்கப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை எனவும், இதற்காக காத்துக் கொண்டிருந்ததாகவும் பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாவடேகர், ‘அன்னா குழு கலைப்பு நடக்கவேண்டிய ஒன்றுதான். அன்னா குழு இப்போது தங்கள் போராட்டைத்தைக் கைவிட்டுள்ளது. அவர்களது உண்ணாவிரதம் முடிந்துவிட்டது. அதனால்தான் அக்குழு கலைக்கப்பட்டுள்ளது. அன்னா குழு இப்போது அரசியலில் குதிக்க உள்ளது’ என்றார். எனினும் அரசியல் அரங்கில் அன்னா குழுவினரின் வெற்றிவாய்ப்பு பற்றி ஜாவடேகர் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. அதுபற்றி பேசிய அவர், ‘நாட்டில் 500-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் சில கட்சிகளின் பிரதிநிகள் பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் கட்சி துவங்கவும், தேர்தலில் போட்டியிடவும் ஒவ்வொருவருக்கும் அதிகாரமுள்ளது.’ என்றார்.
மேலும், ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் மசோதா கோரியும் நீண்டகாலமாக பாரதீய ஜனதா போராடி வருகிறது எனவும், இதே நோக்கங்களுக்காகவே அன்னா குழு தோற்றுவிக்கப்பட்டதாகவும் ஜாவடேகர் கூறியுள்ளார். 'வர இருக்கும் பாராளுமன்ற தொடரில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்’ எனவும் ஜாவடேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment