பாராளுமன்ற மேலவையில் இன்று விவாதம் நடந்துகொண்டிருந்தபோது, அசாம் பிரச்சினை பற்றி விவாதிக்க வேண்டும் என்று ஜெயா பச்சன் எம்.பி. வலியுறத்தினார்.
அப்போது அவரது தொழிலை விமர்சனம் செய்யும் வகையில் பதில் அளித்த உள்துறை அமைச்சர் ஷிண்டே, இது சீரியசான விஷயம். சினிமாவில் வரும் சம்பவம் அல்ல என்று கடுப்பாக பேசினார். இதற்கு ஜெயா பச்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மற்ற உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
புகழ்பெற்ற எம்.பி.யான ஜெயாபச்சன் மீது தனது வெறுப்பை காட்டுவதுபோல் பேசியிருக்கும் அமைச்சர் ஷிண்டே தனது கருத்தை வாபஸ் பெறவேண்டு என்று அருண் ஜெட்லி வலியுறுத்தினார். இல்லாவிட்டால் அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து தனது கருத்தை வாபஸ் பெற்ற ஷிண்டே, நான் கூறியது அவரது மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் எனது சகோதரி. அவரது குடும்பத்தின் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment